தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
பெரம்பலூர்
தேங்கி நிற்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், துங்கபுரம் ஊராட்சி அண்ணாநகர் பஸ் நிறுத்தம் அருகில் பொதுமக்களின் தேவைக்காக குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இதில் இருந்து அப்பகுதி மக்கள் குடிநீரை பிடித்து பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் குடிநீர் தொட்டி அருகே கழிவுநீர் செல்ல வழியில்லாததால் தொட்டியில் இருந்து வெளியேறும் தண்ணீர் அருகே தேங்கி சாக்கடையாக மாறி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதனால் இப்பகுதியில் அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல்கள் பரவ அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
விஸ்வநாதன், துங்கபுரம்.
Related Tags :
Next Story