தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

திருச்சி

சுகாதாரமற்ற பஸ் நிலையம்

திருச்சி மாவட்டம், துறையூர் பஸ் நிலையத்திற்குள் திருச்சி, பெரம்பலூர், கரூர், நாமக்கல் போன்ற வழித்தடங்களிலிருந்து தினமும் நூற்றுக்கணக்கான பஸ்களும் ஆயிரக்கணக்கான பயணிகளும் வந்து செல்கின்றனர். ஆனால் பஸ் நிலைய வளாகம் மற்றும் கட்டண கழிப்பறை ஆகியவை சுகாதாரமற்ற நிலையில் உள்ளது. மேலும் பஸ் வளாகத்தில் பயணிகள் நிற்க சிரமப்படும் அளவிற்கு தரைக்கடை வியாபாரிகளும் ஆக்கிரமிப்பு செய்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், துறையூர்.

ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?

திருச்சி ஶ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் இருந்து ராஜகோபுரம் வரை உள்ள ரோட்டின் மேல்புறம் நிழல்தரும் நடைமேடை சில ஆண்டுகளுக்கு முன்பு பக்தர்களுக்காகவும், பொதுமக்களின் வசதிக்காகவும் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வந்தது. இந்த நிலையில் தற்போது யாரும் நடைமேடையில் நடந்து செல்ல இயலாதவாறு ஆங்காங்கே உள்ள கடைக்காரர்களும், நடைபாதை வியாபாரிகளும் நிரந்தர ஆக்கிரமிப்பு செய்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், ஶ்ரீரங்கம்.

ஆபத்தான மின்கம்பம்

திருச்சி ஓலையூர் இ.பி.காலனியில் உள்ள திருவள்ளுவர் தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கும் வகையில் சாலையோரம் மின் கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின்கம்பம் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது சிதிலமடைந்து சிமெண்டு பூச்சிகள் உதிர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. எனவே பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின்கம்பம் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

சாந்தா, ஓலையூர்.

வீணாகும் குடிநீர்

திருச்சி மாவட்டம், கே.கே.நகர் சாலையில் அமைந்துள்ள கிருஷ்ணமூர்த்தி நகரில் முக்கிய தெருக்களில் குடிநீர் குழாய்கள் அடிக்கடி உடைந்து அதில் இருந்து அதிக அளவில் குடிநீர் வெளியேறி குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால் குடிநீர் வீணாவதுடன், கொசு உற்பத்தியாகி இப்பகுதியில்

காய்ச்சல் பரவ அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், கிருஷ்ணமூர்த்தி நகர்.

சட்ட விரோதமாக மது விற்பனை

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம் முத்தரசநல்லூர் காமராஜபுரம் அருகே உள்ள விக்னேஷ் பாரடைஸ் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் தினமும் காலை 6 மணி முதல் இரவு 12 மணி வரை சட்ட விரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் மது பிரியர்கள் எந்நேரமும் மது அருந்திவிட்டு இப்பகுதியாக செல்லும் பெண்களை கேலி செய்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

விஜயராஜ், காமராஜபுரம்.

குடிநீர் இன்றி மக்கள் அவதி

திருச்சி மாநகராட்சி, கோபிசேகபுரம் கோட்டம், உறையூர் பகுதி மக்கள் டாக்டர் பங்களா, செல்வ மாரியம்மன் கோவில் தெரு, வடிவேல் நகர் போன்ற பகுதிகளில் போதுமான குடிநீர் வினியோகம் செய்யப்படுவதில்லை. இதனால் அன்றாட தேவைகளுக்கு மக்கள் குடிநீர் இன்றி தவித்து வருகிறார்கள். இதுகுறித்து அரசு அதிகாரிகளுக்கு பலமுறை தகவல் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இதுகுறித்து உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

ஆபத்தான பாதாள சாக்கடை மூடி

திருச்சி வயலூர் சாலை சீனிவாச நகர் 7-வது மெயின் ரோடு அருகே சாலையின் நடுவில் அமைக்கப்பட்டுள்ள பாதாள சாக்கடையின் மூடி உடைந்து கம்பிகள் வெளியே தெரிகின்றது. இந்த வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மூடி உடைந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

ஆபத்தான மின்கம்பிகள்

திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், ஆதிகுடி ஊராட்சி மாரியம்மன் கோவில் எதிரில் மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின்கம்பிகள் மரக்கிளைகளில் உரசியவாறு மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளன. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.


Next Story