தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

புதுக்கோட்டை

அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கும் மக்கள்

புதுக்கோட்டை மாவட்டம், திருவப்பூர் 28-வது வார்டு பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் முறையான சாலை வசதி, கழிவுநீர் வாய்க்கால் வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் இல்லை. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

முத்துக்குமார், திருவப்பூர்.

கழிவுநீர் வாய்க்கால் அமைக்கப்படுமா?

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே உள்ள அன்னவாசல் திருவள்ளுவர் நகரில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்லும் வகையில் இப்பகுதியில் முறையான கழிவுநீர் வாய்க்கால் வசதி ஏற்படுத்தப்படாமல் உள்ளது. இதனால் இப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், அன்னவாசல்.

ஆபத்தான மின்கம்பம்

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஊராட்சி ஒன்றியம், மதகம் ஊராட்சி செப்பவயல் கிராமத்திற்கு செல்லும் சாலை ஓரத்தில் உள்ள 3 மின் கம்பங்கள் சிதிலமடைந்து சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. மின்கம்பங்கள் எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழும் நிலையில் உள்ளதால், இதன் அருகே பொதுமக்கள் செல்லும்போது முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், செப்பவயல்.

சேறும், சகதியுமான சாலை

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி பேரூராட்சி நெய்வேலி ரோடு விலக்கு சாலையில் இருந்து ரசூல்நகர் வரை செல்லும் சாலை பல ஆண்டுகளாக மண் சாலையாகவே உள்ளது. இந்த நிலையில் தற்போது பெய்த மழையின் காரணமாக சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இதனால் இந்த சாலையில் பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், நெய்வேலை ரோடு.

குண்டும், குழியுமான சாலை

புதுக்கோட்டை மாவட்டம், வாணக்கன்காட்டில் இருந்து புள்ளான்விடுதி மேற்கு பகுதிக்கு செல்லும் சாலை மிகவும் சிதிலமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இந்த சாலை வழியாக செல்லும்போது வாகனங்கள் அடிக்கடி பழுதடைந்து வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள்நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், வாணக்கன்காட்டி.


Next Story