தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

பெரம்பலூர்

தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, நாட்டார்மங்கலம் கிராமத்தில் சரிவர மின்திறன் வராததால் இல்லத்தரசிகள் அல்லாடி வருகின்றனர். மேலும் பஸ் நிலையத்தில் இருந்து ஊருக்குள் செல்லும் சாலையில் தெரு விளக்குகள் எரியாததால் இரவு நேரங்களில் ஊருக்குள் செல்பவர்கள் அச்சத்துடனே செல்கின்றனர் என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இதனை சரிசெய்தனர். இதற்கு செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த மின்சாரத்துறை அதிகாரிகளுக்கும் இப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

பொதுமக்கள், நாட்டார்மங்கலம்.

புழுதி பறக்கும் சாலை

பெரம்பலூர் மாவட்டம், வல்லாபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள தார்சாலை சிதிலமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. மேலும் நான்கு சக்கர வாகனங்கள் சாலையில் செல்லும்போது புழுதி பறப்பதினால் இருசக்கர வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், வல்லாபுரம்.

சுத்தம் செய்யப்படாத நீர்த்தேக்க தொட்டி

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, தெரணி கிராமத்தில் வசிக்கும் பொதுமக்களுக்கு அப்பகுதியில் உள்ள நீர்த்தேக்க தொட்டியில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த நீர்த்தேக்க தொட்டியை சுத்தம் செய்யாததால் சுகாதாரமற்ற நிலையில் தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதனால் இப்பகுதி மக்களின் உடல்நிலை பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், தெரணி.

சாலையின் நடுவே மின்கம்பம்

பெரம்பலூர் நகராட்சி அலுவலகம் பின்புறம் உள்ள சாலையின் நடுவே மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின்கம்பத்தால் இரவு நேரத்தில் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் சாலையின் நடுவே மின்கம்பம் இருப்பது தெரியாமல் நிலைதடுமாறி மின்கம்பத்தின் மீது மோதி காயமடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சாலையின் நடுவே உள்ள மின் கம்பத்தை சாலையோரத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், பெரம்பலூர்.

இணைப்பு சாலை அமைக்க கோரிக்கை

பெரம்பலூர் புதிய பஸ்நிலையம்-நகராட்சி அலுவலக பின்பகுதியில் வெங்கடாஜலபதி நகர், எம்.எம்.நகர் ஆகிய குடியிருப்புகள் உள்ளன. எளம்பலூர் சாலையில் உள்ள ரோஸ்நகர், ரோஸ்கார்டன் நகர் விரிவாக்கப்பகுதியில் இருந்து பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்திற்கும், துறைமங்கலத்திற்கு பொதுமக்கள் தற்போது ரோவர் பள்ளி சாலை வழியே இருசக்கர வாகனங்களில் சென்று வருகின்றனர். ரோஸ்நகர் குடியிருப்பு பகுதியை, தலையாட்டி சித்தர் ஆசிரமம் வழியாக புதிய பஸ் நிலையம், துறைமங்கலம் செல்ல வசதியா க இணைப்பு சாலை அமைத்து தரவேண்டும். இதனால் பயணநேரமும், போக்குவரத்து நெரிசலும் குறையும் எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

ஸ்ரீராமன் ஆதித்யா, பெரம்பலூர்.


Next Story