தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

புதுக்கோட்டை

சாலை வசதி வேண்டும்

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஒன்றியம், முக்கண்ணாமலைப்பட்டி ஊராட்சி வடக்குவீதி முன்சிப் தெரு மற்றும் காதரப்பா தெருவில் சாலை வசதி இல்லாததால் இப்பகுதி மக்கள் மழைபெய்யும்போது சேறும், சகதியுமான சாலையில் நடக்க முடியாமல் நடந்து சென்று வருகின்றனர். மேலும் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் நிலைதடுமாறி சென்று வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

ரகுமத்துல்லா, முக்கண்ணாமலைப்பட்டி.

பஸ் நேரம் மாற்றப்படுமா?

புதுக்கோட்டை மாவட்டம், முள்ளூர் ஊராட்சி கும்முப்பட்டிக்கு, புதுக்கோட்டையில் இருந்து மாலை 4.35 மணிக்கு அரசு பஸ் இயக்கப்பட்டு வந்தது. இந்த பஸ்சில் முள்ளூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் கும்முப்பட்டி, முத்தைக்கோன்பட்டி, அய்யம்பட்டி, வழியன்ப்பட்டி ஆகிய பகுதிகளில் வசிக்கும் மாணவ-மாணவிகள் பயணம் செய்து பயனடைந்து வந்தனர். தற்போது கடந்த சில நாட்களாக இந்த பஸ் மாலையில் 5.30 மணிக்கு மேல் தான் வருகிறது. இதனால் பள்ளி மாணவ-மாணவிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

சுரேஷ், முள்ளூர்.

நிறுத்தத்தில் நிற்காத பஸ்கள்

புதுக்கோட்டை மாவட்டம், பாலன் நகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பஸ் நிறுத்தத்தில் பஸ்கள் சரியாக நிறுத்தப்படுவது இல்லை. இதனால் காலை நேரத்தில் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்வேர் என பலதரப்பு மக்களும் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பாலன்நகர் பஸ் நிறுத்தத்தில் அனைத்து பஸ்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

விக்கி, பாலன் நகர்.

எலும்பு கூடான மின்கம்பம்

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட வடுகப்பட்டி ஊராட்சி அண்ணாமலை குடியிருப்பு பகுதியில் சாலை ஓரத்தில் மின் கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின்கம்பம் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது சிதிலமடைந்து எலும்புக்கூடுபோல் காட்சியளிக்கிறது. பொதுமக்கள் நடமாட்டத்தின் போது இந்த மின் கம்பம் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

ராம், வடுகப்பட்டி.

வரத்து வாரியில் விழுந்த மரம்

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை ஒன்றியம், தச்சன்குறிச்சி ஊராட்சியில் உள்ள பழைய மாதா கோவில் தெருவில் ஆரணி வாய்க்கால் என்ற வரத்து வாரி உள்ளது. மழை நேரத்தில் இந்த வாரியின் வழியாக ஆரணி குலத்திற்கு தண்ணீர் சென்று குலம் பெருகும் அதிலிருந்து நீர் விவசாயத்திற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இந்த வாரியின் குறுக்கே உள்ள பாலத்தில் மரம் ஒன்று விழுந்து அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நீர் குலத்திற்குச் செல்லாமல் வீணாக வெளியேறுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், தச்சன்குறிச்சி.


Next Story