தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

திருச்சி

ஆக்ரோஷமாக திரியும் தெருநாய்கள்

திருச்சி பொன்மலைப்பட்டி அடைக்கல அன்னை நகர் 3-வது, 4-வது தெருவில் தெரு நாய்கள் கூட்டமாக அலைந்து கொண்டும் ஆக்ரோஷமாக சண்டையிட்டுக்கொள்கின்றன. இதனால் சாலையில் பெண்கள், குழந்தைகள் நடந்து செல்ல பெரிதும் அச்சப்படுகின்றனர். மேலும் சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளை கடிக்க துரத்துவதினால் அவர்கள் பயத்தில் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், பொன்மலைப்பட்டி.

பெரிய விபத்து ஏற்பட வாய்ப்பு

திருச்சி மாவட்டம், 18-வது வார்டுக்கு உட்பட்ட தஞ்சை மெயின் ரோட்டில் ஜின்னா திடல் இறக்கம் அருகிலும், சூலக்கரை மாரியம்மன் கோவில் பஸ் நிறுத்தம் அருகிலும் மெயின் ரோட்டில், நடுவில் பள்ளங்கள் ஏற்பட்டு தினமும் விபத்துகள் அதிகம் நடக்கிறது. எனவே பெரிய அளவில் விபத்து ஏற்படும் முன்பு இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

சையது முஸ்தபா, ஜின்னா திடல்.

பள்ளத்தில் தேங்கும் மழைநீர்

திருச்சி மாவட்டம், லால்குடி அகிலான்டேஸ்வரி நகர் விஸ்தரிப்பு ஐஸ்வர்யாநகர் தெருவில் உள்ள சாய்பாபா கோவில் அருகில் நீண்ட நாட்களாக பள்ளம் இருப்பதால் மழைகாலங்களில் இந்த பள்ளத்தில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் முதியவர்கள், பெண்கள் தடுமாறி கீழே விழுந்து வருகின்றனர். மேலும் தேங்கி நிற்கும் மழைநீரில் அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி இப்பகுதி நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

சுப்பிரமணியன், திருச்சி.

சுற்றுச்சுவர் இல்லாத கிணறு

திருச்சி ஸ்ரீரங்கம் ரெயில்வேகேட்- மயானசாலை மெயின் ரோட்டில் கொள்ளிடம் ஆற்றுக்குடிநீர் பம்பிங்கிணறு அமைக்கப்பட்டுள்ளது. இந்த கிணற்றை சுற்றி அமைக்கப்பட்டு இருந்த சுவர் வாகனங்கள் மோதி சிதிலமடைந்துள்ளது. இதனால் இந்த வழியாக செல்லும் குழந்தைகள் இந்த கிணற்றில் விழ அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பாலசுப்பிரமணியம், ஸ்ரீரங்கம்.

ஆபத்தான மின்கம்பம்

திருச்சி மாவட்டம், பூனாம்பாளையம் கிராமத்தில் ஆட்டக்காரபண்ணையில் உள்ள பள்ளிக்கு செல்லும் வழியில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பம் மிகவும் சிதிலமடைந்து எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழும் நிலையில் உள்ளது. பள்ளி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் நடந்து செல்லும்போது இந்த மின்கம்பம் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பாரதிராஜா, பூனாம்பாளையம்.


Next Story