தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

புதுக்கோட்டை

புதர்போல் காட்சி அளிக்கும் சாலை

புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு -ஆவணம் கைகாட்டி செல்லும் நெடுஞ்சாலை பகுதிகளில் சாலையின் இரு புறங்களிலும் புதர் போல மண்டி கிடந்து வரும் செடிகளால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். இப்பகுதிகளில் உள்ள சாலை ஓரங்களில் புதர் போல காட்சியளிக்கும் செடி-கொடிகளால்‌ கொடிய விஷ சந்துக்களால் வாகன ஓட்டிகள் மற்றும் பாத சாரிகள் பாதிப்படைய அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

லாரிகளால் மக்கள் அவதி

புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு நெடுஞ்சாலை பகுதிகளில் அதிக சத்தத்துடன் ஏர் ஹாரன்களை ஒலிக்க விட்டவாறு செல்லும் லாரிகளால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

ஆபத்தான மின்கம்பம்

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் அருகே உள்ள வேப்பங்குடிசெல்லும் சாலையில் உள்ள மின்சார இரும்பு கம்பம் சாய்ந்து மின்சார வயர்கள் மரத்தில் தொற்றிக் கொண்டுள்ளது. இதனால் ஏதேனும் ஆபத்து ஏற்படுவதற்கு முன்பு இதனை சரி செய்ய மின்சார வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

சிதிலமடைந்த ரேஷன் கடை

புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு அருகே உள்ள அனவயல் தடியமனை பகுதியில் செயல்பட்டு வரும் ரேஷன் கடை சேதமடைந்து மழை காலங்களில் தண்ணீர் கசிவு ஏற்படுவதால் தார் பாய் கொண்டு மூடப்பட்ட நிலையில் இருந்து வருகிறது .பழமையான இக்கட்டிடத்தை இடித்து அகற்றிவிட்டு புதிய கட்டிடம் அமைத்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பழுதான ரத்த பரிசோதனை எந்திரம்

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அரசு மருத்துவமனையில் 3 நாட்களாக ரத்த பரிசோதனை செய்யும் எந்திரம் பழுதாகி உள்ளது. தற்போது உள்ள சூழ்நிலையில் காய்ச்சல், சளி உள்ள நோயாளிகள் அதிகம் வருகின்றனர். அதற்கு பரிசோதனை செய்வதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.


Next Story