தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
மயானத்திற்கு சாலை வசதி வேண்டும்
திருச்சி மாவட்டம், மருங்காபுரி ஒன்றியம், கஞ்சநாயக்கன்பட்டி கிராமம் செட்டியபட்டியில் நீண்ட காலமாக மயானத்திற்கு செல்ல சாலை வசதி இல்லாததால் விவசாய நிலங்கள் வழியாகவும், தோப்புகள் வழியாகவும் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள் அவதி
திருச்சி கிராப்பட்டி பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்திற்காக தோண்டப்பட்ட குழி மற்றும் சாக்கடை கழிவுகளை அப்படியே ரோட்டிலேயே போட்டுவிட்டு சென்று விட்டனர். இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
இடம் இல்லாத வாகன நிறுத்துமிடம்
திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகில் உள்ள இரு சக்கர வாகன நிறுத்தத்தில் எப்போதும் இடமில்லை என்ற வாசகத்துடன் கூடிய பதாகை தான் உள்ளது. இதனால் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு வெளியூர் செல்பவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே பொதுமக்களின் நலன் கருதி மாநகராட்சி அடுத்ததாக ஒரு இடம் அமைத்து பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் இரு சக்கர வாகன நிறுத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
எலும்பு கூடான மின்கம்பம்
திருச்சி மாவட்டம், துறையூர் வட்டம், வேங்கடத்தனூர் மயான பாதையோரம் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பம் சிதிலமடைந்து சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து எலும்புக்கூடு போல் காட்சியளிக்கிறது. பொதுமக்கள் நடமாட்டத்தின் போது இந்த மின் கம்பம் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி
திருச்சி மாவட்டம், அரியமங்கலம் கோட்டம், தஞ்சை மெயின் ரோடு, சூலக்கரை மாரியம்மன் கோவில் பஸ் நிறுத்தம் அருகே சாலையில் பள்ளம் ஏற்பட்டு அடிக்கடி விபத்துகள் நடந்து வந்தன. இது குறித்து தினத்தந்தி புகார் பெட்டி பக்கத்தில் செய்து வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சாலையில் ஆங்காங்கே ஏற்பட்டிருந்த பள்ளங்களை சரி செய்தனர். எனவே செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கும் இப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.