தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற 'வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

அரியலூர்

உயர் மின் கோபுரம் அமைக்கப்படுமா?

அரியலூர் பஸ் நிலையத்திலிருந்து தேரடி வரை தினமும் பொதுமக்கள் அதிகளவில் நடந்தும், இருசக்கர வாகனத்தின் மூலம் கடை தெருவிற்கு சென்று வருகின்றனர். மேலும் இந்த பகுதி பெரம்பலூர், தஞ்சாவூர், திருச்சி ஆகிய ஊர்களுக்கு செல்லும் முக்கிய வழியாக திகழ்கிறது. ஆனால் இந்த பகுதியில் போதிய மின் விளக்குகள் இல்லை. இரவு நேரங்களில் இருள் சூழ்ந்த பகுதியாக உள்ளது. சில சமயங்களில் இரவு நேரங்களில் சாலை நடுவே மாடுகள் படுத்துள்ளது. இதன் காரணமாக இரு சக்கர வாகனத்தில் செல்பவர்களுக்கு விபத்தும் நிகழ்ந்துள்ளது. இந்த நிலை நிரந்தரமாக உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அரியலூர் பஸ் நிலையம் நுழைவாயில் முதல் தேரடி வரையுள்ள பகுதிகளில் ஏதேனும் ஒரு இடத்தில் உயர் மின் கோபுரம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

எரியாத மின் விளக்குகள்

அரியலூர் பல்துறை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மின் விளக்குகள் இரவு நேரத்தில் எரிவதில்லை. இதனால் இப்பகுதியில் சட்டவிரோத செயல்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பள்ளி மாணவர்கள் அவதி

அரியலூர் பெரியார் நகரில் உள்ள அரண்மனை தெரு பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாதாளசாக்கடை, குடிநீர் குழாய் அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்காக பள்ளம் தோண்டப்பட்டு பணிகள் முடிந்தவுடன் பள்ளங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. ஆனால் தற்போது பெய்த மழையினால் மூடப்பட்ட பள்ளத்தில் மண்கள் உள்வாங்கிய நிலையில் ஆங்காங்கே மேடு பள்ளம்போல் காட்சியளிக்கிறது. மேலும் இப்பகுதியில் உள்ள அரண்மனையின் முன்பு மழைநீர் அதிக அளவில் தேங்குவதினால் பள்ளி மாணவ-மாணவிகள் இருந்த வழியாக செல்ல முடியாமல் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

கழிவறை வசதி ஏற்படுத்த கோரிக்கை

அரியலூர் மாவட்டம், வி.கைகாட்டி வழியாக பல்வேறு ஊர்களுக்கு பொதுமக்கள் அதிகளவில் சென்று வருகின்றனர். ஆனால் இயற்கை உபாதைக்கு ஒதுங்கவோ அல்லது சிறுநீர் கழிக்கவோ போதிய கழிவறை வசதி இல்லாத நிலையில் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

சிறப்பு மருத்துவ முகாம் நடத்த வேண்டும்

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், ஜெயங்கொண்டம் தாலுகாவில் உள்ள 18-வது வார்டில் கடந்த ஒரு வாரமாக காய்ச்சல் பரவும் சூழ்நிலையானது ஏற்பட்டு வருகிறது. இதனால் பச்சிளம் குழந்தைகள், கர்ப்பிணிகள் மிகவும் பாதிக்கப்படுகின்றன. மேலும் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளின் மூலமாக மற்ற குழந்தைங்களுக்கும் பரவும் அபாயம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இதனால் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகளின் நலன் கருதி நடமாடும் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ குழுவினை கொண்டு இப்பகுதியில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.


Next Story