தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற 'வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

திருச்சி

தார்சாலை வசதி வேண்டும்

திருச்சி ரெட்டமலை ஒண்டி கருப்பு சாமி கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த கோவிலுக்கு செல்லும் சாலை மண் சாலையாக உள்ளதால் ஆங்காங்கே குண்டும், குழியுமாக காணப்படுகிறது. மேலும் மழை பெய்யும்போது சேறும், சகதியுமாக உள்ளதால் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

தெருநாய்களால் தூக்கமின்றி தவிக்கும் மக்கள்

திருச்சி மாநகராட்சி சவேரியார் கோவில் தெரு மற்றும் கூனி பஜார் பகுதியில் ஏராளமான தெருநாய்கள் சாலைகளில் சுற்றித்திரிகின்றன. இவை இந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளை கடிக்க துரத்துவதினால் அவர்கள் நிலைதடுமாறி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இரவு நேரத்தில் 10-க்கும் மேற்பட்ட நாய்கள் ஒன்றுகூடி ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டுக்கொள்வதினால் அருகில் உள்ள மக்கள் சத்தத்தால் தூக்கமின்றி பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

தேங்கி நிற்கும் கழிவுநீர்

திருச்சி மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட ஒலையூர் மெயின் ரோட்டில் இச்சுக்காமாலைபட்டி பஸ் நிறுத்தம் எதிரில் சாக்கடை கழிவுநீர் பல நாட்களாக குளம்போல் தேங்கியுள்ளது. இதனால் உயிர்க்கொல்லி நோய்களை பரப்பும் கொசுக்களின் உற்பத்தி இடமாக இருந்து வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

குவிந்து கிடக்கும் குப்பைகள்

திருச்சி கே.கே.நகர் அய்யப்பநகர் வால்மீகி தெருவில் மரமட்டைகள் வெட்டியகுப்பைகள் காலி மனையில் குவிந்துள்ளது. இதனை அகற்றுவதற்கு மாநகராட்சி அதிகாரிகளுக்கு பலமுறை தெரிவித்தும் அகற்றப்படாத நிலையில் உள்ளது. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பட்டுப்போன வேப்பமரம்

திருச்சி கே.கே.நகர் அய்யப்பநகர் மணிகண்டன் தெருவில் உள்ள வேப்பமரம் ஒன்று பட்டுப்போன நிலையில் பல ஆண்டுகளாக உள்ளது. பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மரம் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.


Next Story