தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 19 Sept 2022 12:14 AM IST (Updated: 19 Sept 2022 12:23 AM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற 'வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

புதுக்கோட்டை

ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி தாலுகா, கண்டியாநத்தம் கிராமத்தில் உள்ள குள்ளான் கண்மாயின் நீர் நிலை பகுதியை அருகில் உள்ளவர்கள் ஆக்கிரமிப்பு செய்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் உள்ள மற்ற நிலத்திற்கு செல்லும் வழி நடை ஆக்கிரமிக்கப்படுவதால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

எலும்பு கூடான மின்கம்பம்

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் அருகே உள்ள மேட்டுப்பட்டி ஈட்டி தெரு விநாயகர் கோவில் அருகில் மின்கம்பம் அமைக்கப்பட்டு அருகில் உள்ள வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த மின்கம்பம் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது சிதிலமடைந்து எலும்பு கூடுபோல் காட்சி அளிக்கிறது. பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின்கம்பம் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

உயர் கோபுர மின் விளக்கு அமைக்கப்படுமா?

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஒன்றியம், வேப்பங்குடி ஊராட்சி, இம்மணம்பட்டி கிராமத்தில் உள்ள புகழ்பெற்ற முத்துமாரியம்மன் கோவில் பகுதியில் இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து காணப்படுவதினால் இப்பகுதி மக்கள் இப்பகுதியில் இரவு நேரத்தில் செல்ல பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் உயர் கோபுர மின் விளக்கு அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

குண்டும், குழியுமான தார்சாலை

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஒன்றியம், வன்னியம்பட்டி ஊராட்சிநெய்வாசல்பட்டி கடை பஸ் நிறுத்தத்தில் இருந்து ஓட்டுபாலம்பட்டி கிராமம் வரை தார் சாலை சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் குண்டும், குழியுமாக சிதலமடைந்து உள்ளது. ஆங்காங்கே சாலையின் நடுவே மிகப்பெரிய பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. தார்சாலை முழுவதும் பெயர்ந்து தற்போது ஜல்லி சாலையாக காட்சியளிக்கின்றது. இதனால் இப்பகுதியில் செல்லும் பள்ளி மாணவ-மாணவிகள் விவசாய பணிக்கு செல்வோர், பால் விற்பனைக்கு சொல்வோர் மற்றும் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

வெள்ளை வர்ணம் பூசப்படாத வேகத்தடை

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் தாலுகா, மலைக்குடிபட்டி கோத்திரப்பட்டி செல்லும் பிரிவு சாலை அருகில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடையில் வெள்ளை வர்ணம் பூசாமல் உள்ளது. இதனால் இரவு நேரத்தில் இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் சாலையில் வேகத்தடை இருப்பது தெரியாமல் நிலைதடுமாறி செல்கின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.


Next Story