தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற 'வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

திருச்சி

நாய்கள் தொல்லை

திருச்சி ஜங்ஷன் பகுதியில் இரவு நேரத்தில் ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. இவை இந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளை அடிக்க துரத்துவதுடன், ரெயில் பயணிகளை கடிக்க வருகிறது. இதனால் அவர்கள் பெரிதும் அச்சத்துடனேயே செல்லும் நிலை உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

நோய் பரவும் அபாயம்

திருச்சி மத்திய பஸ் நிலையத்திற்கு தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். அவர்களின் வசதிக்காக பஸ் நிலையத்தில் இலவச கழிவறை அமைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் கழிவறை பராமரிப்பு இன்றி கடும் துர்நாற்றம் வீசுவதினால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதனால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

சாலையில் செல்லும் கழிவுநீர்

திருச்சி மாநகராட்சி 63-வது வார்டு சுப்பிரமணிய நகர் மெயின் சாலை பகுதியில் சாலையோரத்தில் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த கழிவுநீர் வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் செல்ல வழியின்றி சாலையில் செல்கிறது. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

ஆபத்தான பாதாள சாக்கடை மூடி

திருச்சி சங்கிலியாண்டபுரம்காந்தி தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்லும் வகையில் சாலைகளின் நடுவே பாதாள சாக்கடை வசதி அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு விட்டால் அதனை சரி செய்வதற்காக ஆங்காங்கே மூடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் காந்தி தெருவில் அமைக்கப்பட்டுள்ள ஒரு முடிவு சிதிலமடைந்து பாதாள சாக்கடையில் விழும் நிலையில் உள்ளது. இதனால் இரவு நேரத்தில் இந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

வேகத்தடை அமைக்கப்படுமா?

திருச்சி-தஞ்சை சாலையில் சூளக்கரை மாரியம்மன் கோவிலுக்கு அடுத்து சிறிது தூரத்தில் விஸ்வாஸ்நகர் செல்வதற்கு குறுக்கு சாலை உள்ளது. இந்த சாலையில் உள்ள ஒரு திருமண மண்டபம் வழியாக சென்று வலதுபுறம் திரும்பி விஸ்வாஸ்நகர் குறுக்கு தெருக்களுக்கு செல்ல வேண்டும். அவ்வாறு வலதுபுறம் திரும்பும் இடத்தில் விபத்துக்களை தடுக்கும் வகையில் வேகத்தடை அமைக்க வேண்டும். ஆனால் அந்த சாலையில் உள்ள வேகத்தடை குறிப்பிட்ட இடத்தில் இல்லாமல் சிறிது தூரம் தள்ளி அமைக்கப்பட்டுள்ளது. இதனால் வலதுபுறம் திரும்பும் வாகனங்கள் கட்டுப்பாடற்ற வேகத்தில் தாறுமாறாக செல்கின்றன. அந்த பகுதியில் சிறு குழந்தைகள் எந்நேரமும் விளையாடி கொண்டு இருப்பார்கள். அங்கு கனரக வாகனங்கள் அதிக வேகத்தில் செல்வதால் விபத்துக்களும் ஏற்படுகிறது. ஆகவே அங்குள்ள வேகத்தடையை களஆய்வு செய்து, சரியாக வளைவில் திரும்பும் இடத்தில் அமைத்தால் விபத்துக்களை தவிர்க்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.


Next Story