தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

அரியலூர்

சாலையில் சுற்றித்திரியும் மாடுகள்

அரியலூர் டவுனில் போக்குவரத்துக்கு இடையூறாக எப்போதும் அதிகளவில் மாடுகள் சுற்றி திரிகின்றன. குறிப்பாக இரவு நேரங்களில் வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து தேரடி வரை மாடுகள் சாலையின் குறுக்கே அதிக அளவில் நிற்பதால் இரு சக்கர வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் சென்டர் மீடியன் பகுதிகளில் மாடுகள் கூட்டம் கூட்டமாக படுத்துள்ளதால் இரவு நேரங்களில் இரு சக்கர வாகன ஓட்டிகள் தடுமாற்றம் அடைகின்றனர். சில சமயங்களில் இரு சக்கர வாகன ஓட்டிகளை முட்டி விடுகிறது. இதனால் விபத்துக்கள் ஏற்படுகிறது. இதோட அல்லாமல் இரவு நேரங்களில் மாடுகள் சாலையின் நடுவில் நிற்பதால் மருத்துவமனைக்கு செல்லும் 108 ஆம்புலன்ஸ்கள் நீண்ட நேரம் நின்று விடுகிறது. இதனால் ஆம்புலன்ஸில் உள்ள கர்ப்பிணிகள் மற்றும் விபத்தில் அடிபட்டவர்களை உடனடியாக மருத்துவமனையில் சேர்க்க முடியாமல் போய் விடுகிறது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பழுதடைந்துள்ள மின் மயானம்

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு உட்பட்ட மீனாம்பாடி- செந்துறை சாலையில் அமைக்கப்பட்டுள்ள மின் மயானம் பழுதடைந்துள்ளது. இதனால் இப்பகுதியில் இறந்தவர்களின் உடல்களை எரிக்க பெரிதும் சிரமமாக உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

வேகத்தடையில் வெள்ளை வர்ணம் பூசப்படுமா?

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள மகிமைபுரத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளி அருகே சாலையில் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த வேகத்தடையில் வெள்ளை வர்ணம் பூசப்படாமல் உள்ளதால் தூரத்தில் இருந்து வரும் வாகன ஓட்டிகளுக்கு வேகத்தடை இருப்பது தெரியாமல் வேகமாக வரும்போது, அவர்கள் நிலை தடுமாறி செல்கின்றனர். மேலும் இரவு நேரத்தில் இந்த வழியாக செல்பவர்கள் வேகத்தடையில் வாகனத்தைவிட்டு நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். இதனால் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

ஆபத்தான பயணிகள் நிழற்குடை

குளமாக மாறி மண் சாலை

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், தத்தனூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பொட்டக்கொல்லை கிராமத்தில் மாரியம்மன் கோவில் தெருவில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மண் சாலை தற்போது பெய்த மழையின் காரணமாக சேறும், சகதியுமாக மாறியுள்ளதுடன், ஆங்காங்கே பெரிய அளவிலான பள்ளங்கள் ஏற்பட்டு குளம்போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

Next Story