தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
பஸ் வசதி வேண்டும்
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் சட்டமன்ற தொகுதியின் தலைமையிடமாகும். இந்த நிலையில் திருமயம்-சென்னை-திருமயம் அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் இயங்கி வருகிறது. இரு மார்க்க பஸ்கள் திருமயத்திலிருந்து புறப்படுவதும் இல்லை. வருவதும் இல்லாமல் நேராக காரைக்குடி சென்று வருகிறது. சட்டமன்ற தொகுதியின் தலைமையிடத்திலிருந்து மாநில தலைநகருக்கு நேரிடை பஸ்கள் இருந்து இயக்க மறுக்கப்படுகிறது. இரு மார்க்க பஸ்களும் திருமயத்திலிருந்து மட்டும் புறப்பட்டு சென்று வந்தால் திருமயம் மற்றும் சுற்றுவட்டார கிராம பொதுமக்களுக்கு பேருதவியாக இருக்கும். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
வேகத்தடையின் அளவு குறைக்கப்படுமா?
புதுக்கோட்டை நகரப்பகுதியில் சமீபத்தில் வேகத்தடை ஆங்காங்கே அமைக்கப்பட்டது. இந்த வேகத்தடைகள் பெரிய அளவில் அகலமாக சிறிய மேடு போல உள்ளது. இதில் வேகத்தடை உள்ளதை குறிக்கும் வகையில் வெள்ளை கோடுகள் அதிகமாக தெரிவதில்லை. மேலும் இரவில் ஒளிரும் விளக்குகளும் காணப்படுவதில்லை. இதனால் இரவு நேரங்களில் வாகனங்களில் வருபவர்கள் திடீரென நிலைதடுமாறி கீழே விழுகின்றனர். மேலும் சில நேரங்களில் கார்கள் விபத்துக்குள்ளாகுகிறது. இந்த வேகத்தடையின் அகலத்தின் அளவை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
தெருநாய்கள் தொல்லை
புதுக்கோட்டை நகரில் தெரு நாய்கள் அதிகமாக காணப்படுகிறது. இவை சாலையில் நடந்து செல்பவர்களை குரைப்பதுடன் சில நேரங்களில் கடிக்க பாய்கிறது. சாலையின் குறுக்கே பாய்ந்து செல்வதால் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறுகின்றனர். நாய்களின் தொல்லையை போக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
தூர்வாரப்படாத வரத்து வாரிகள்
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டம், அணவயல் புள்ளான் விடுதி கடை தெரு அருகில் உள்ள பாலம் மற்றும் அதனைச் சார்ந்த வரத்து வாரிகள் தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் மழை பெய்யும் போது மழைநீர் செல்ல வழி இன்றி தாழ்வான பகுதிகளில் மழைநீர் புகுந்துவிடுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
குடிநீர் பற்றாக்குறை
புதுக்கோட்டை மாவட்டம், முக்கண்ணாமலைப்பட்டி கிராமத்தில் தெருக்களில் உள்ள குடிநீரை குழாய்களில் வீடுகளுக்கு சட்டவிரோதமாக மினி மோட்டாரை பொருத்தி நீரை எடுப்பதால், குடியிருப்புவாசிகள் தெரு குழாய்களில் நீரை எடுக்கும் போது குறைந்த அளவு நீர் வருவதால் அவர்கள் போதிய குடிநீர் கிடைக்காமல் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.