தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

பெரம்பலூர்

எரியாத தெருவிளக்குகள்

பெரம்பலூர் மாவட்டம், பாலக்கரை ரவுண்டானாவில் இருந்து கலெக்டர் அலுவலகம் செல்லும் சாலையின் நடுவே மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் இந்த மின் விளக்குகள் இரவு நேரத்தில் சரிவர எரிவது இல்லை. இதனால் இரவு நேரத்தில் வாகன ஓட்டிகள் தட்டு தடுமாறி செல்கின்றனர். மேலும் இருளை பயன்படுத்தி சட்ட விரோத செயல்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வி.களத்தூர் கிராம சர்வே எல்லைக்கு உட்பட்ட வி.களத்தூர் மேற்கே உள்ள பெரிய ஏரிகளை சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் மழை பெய்யும்போது மழைநீரை முழுமையாக சேகரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இப்பகுதியில் வெயில்காலங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைய அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

சாலை ஆக்கிரமிப்பு

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, செட்டிக்குளம் கிராமத்தில் இருக்கும் குன்னுமேடு தெருவில் அமைக்கப்பட்டுள்ள சாலை தற்போது ஆக்கிரமிப்புகளால் குறுகி வருகிறது. இதனால் இந்த சாலை வழியாக கனரக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மின்கம்பியில் உரசும் மரக்கிளைகள்

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, செட்டிகுளம் கிராமம், இபி அலுவலகம் அருகில் ஒரு அரசமரம் இருக்கிறது. இந்த நிலையில் அரசமரத்தின் அருகில் இப்பகுதி மக்களுக்காக நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இதில் அப்பகுதி மக்கள் தண்ணீர் பிடித்து பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் இந்த அரசமரத்தின் அருகே உள்ள மின்கம்பத்தில் அமைக்கப்பட்டுள்ள மின் கம்பிகளில் மரக்கிளைகள் உரசிக்கொண்டு இருப்பதால் ஆபத்தான நிலை உள்ளது. இதனால் எந்த நேரம் வேண்டுமானாலும் விபத்து ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பால் உற்பத்தியாளர்கள் அவதி

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் பெரம்பலூர்-ஆத்தூர் சாலையின் அருகே அமைந்துள்ளது. தினசரி நூற்றுக்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்கள் வந்து செல்கின்றனர். தற்போது இந்த சாலை குண்டும் குழியுமாகவும், சேரும் சகதியுமாகவும் உள்ளது. இதனால் பால் உற்பத்தியாளர்கள் இந்த சாலையின் வழியாக வந்து செல்வதற்கு மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் உள்ள சாலையை சீரமைத்து தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.


Next Story