தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
குண்டும், குழியுமான சாலை
புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஒன்றியம் பசுவயல் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள சாலை சிதிலமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
சிதிலமடைந்த நீர்த்தேக்க தொட்டி
புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் தாலுகா, அன்னவாசல் ஒன்றியம், பரம்பூர் ஊராட்சி 1-வது வார்டு கடம்ரயாபட்டியில் ஏராளமாக மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக இப்பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சிதிலமடைந்து ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. எனவே பொதுமக்கள் நடமாவட்டத்தின்போது இந்த நீர்த்தேக்க தொட்டி இடிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பட்டுப்போன புளியமரம்
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் இருந்து புதுக்கோட்டை சாலையில் சுக்கம்பட்டி என்ற இடத்தில் சாலையோரம் பட்டுப்போன நிலையில் எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழும் நிலையில் புளியமரம் ஒன்று உள்ளது. பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த புளியமரம் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
எலும்பு கூடான மின்கம்பங்கள்
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் ஒன்றியத்திற்கு உட்பட்ட கீழச்சேரி ஊராட்சியில் உள்ள காராவயல் கிராமத்தில் 10-க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் சிதிலமடைந்து சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து எலும்பு கூடுபோல் காட்சி அளிக்கிறது. இந்த மின்கம்பங்கள் பொதுமக்கள் நடமாட்டத்தின்போது முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
சாய்ந்த நிலையில் டெலிபோன் கம்பம்
புதுக்கோட்டை வடக்கு ராஜவீதி சீதாபதி விநாயகர் கோவில், சாந்தநாத சாமி கோவில் செல்லும் பாதையில் டெலிபோன் இரும்பு கம்பம் உள்ளது. இதன் அடிப்பகுதி சேதமடைந்து சிறிது சிறிதா சாய்ந்து தற்போது எப்போது வேண்டுமானலும் கீழே விழும் நிலையில் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்பவர்கள் அச்சத்துடன் செல்லும் நிலையில் ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
ஆபத்தான பயணிகள் நிழற்குடை
புதுக்கோட்டை மாவட்டம், ஆதனக்கோட்டை அருகே உள்ள வடக்குத்தொண்டைமான்ஊரணி செல்லும் சாலையில் தெற்குத்தொண்டைமான்ஊரணி விளக்கு சாலை அருகே கட்டப்பட்டிருக்கும் பயணிகள் நிழற்குடையின் மேற்கூரை சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து வருகிறது. இதனால் மேற்கூரையில் அமைக்கப்பட்டுள்ள கம்பிகள் வெளியே தெரிகிறது. மேலும் சுவர்களின் பல்வேறு பகுதிகளில் விரிசல்கள் ஏற்பட்டு ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. இந்த நிலையில் இந்த பயணிகள் நிழற்குடையில் பொதுமக்கள் அடர்ந்து இருக்கும்போது இடிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
சாலையோரம் தோண்டப்பட்ட பள்ளம்
புதுக்கோட்டை மாவட்டம், 9ஏ நத்தம் பண்ணை ஊராட்சிக்கு உட்பட்ட புதுக்கோட்டை-திருச்சி நெடுஞ்சாலையில் திருகோகர்ணம், பாலன்நகர் உள்ளிட்ட இடங்களில் சாலை விரிவாக்கம் பணி நடந்து வருகிறது. இந்த நிலையில் சாலையின் ஒருபுறம் தோண்டப்பட்ட பள்ளம் குறித்து எந்தவித எச்சரிக்கை பலகையோ, ஒளி பிரதிபலிப்பானோ வைக்காததால் இரவு நேரங்களில் தொடர்ந்து விபத்துகள் ஏற்படுகிறது. ஆகையால் சாலை விரிவாக்கம் செய்யும் பணிகளோடு சேர்த்து, இரவு நேரங்களில் ஒளிரும் பதாகைகளை வைத்து , வேலைகள் செய்வதற்கு ஆவணம் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.