தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
சேறும், சகதியுமான சாலை
திருச்சி மாவட்டம், அரியமங்கலம் லட்சுமிபுரம் 2-வது தெருவில் தார்சாலை வசதி இன்றி மண் சாலை தற்போது பெய்த மழையில் சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இதனால் இப்பகுதி மக்கள், வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
கழிவுநீர் வாய்க்கால் அமைக்கப்படுமா?
திருச்சி மாநகராட்சி 25-வது வார்டுக்கு உட்பட்ட உய்யகொண்டான் திருமலை சண்முகாநகர், 2-வது கிராஸ் சாலையோரம் முறையான கழிவுநீர் வாய்க்கால் அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் கழிவுநீர் செல்ல வழியின்றி ஆங்காங்கே தாழ்வான பகுதிகளில் தேங்கி நிற்கிறது. இந்த நிலையில் தற்போது பெய்த மழைநீர் கழிவுநீருடன் கலந்து ஓடுவதினால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
மின்மாற்றியை ஆக்கிரமித்த செடி-கொடிகள்
திருச்சி மாவட்டம், பாலகிருஷ்ணம்பட்டி பேரூராட்சி பி.மேட்டூரிலிருந்து புளியஞ்சோலை செல்லும் வழியிலுள்ள பிடாரி அம்மன் கோவில் ஆலமரத்தடியிலுள்ள மின்மாற்றியை செடி-கொடிகள் வளர்ந்து ஆக்கிரமித்துள்ளன. இதனால் மழை பெய்யும்போது அசம்பாவிதங்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
குழந்தைகளை துரத்தும் தெருநாய்கள்
திருச்சி மாவட்டம், முசிறி தொகுதிகுட்பட்ட கொளக்குடி, அப்பணநல்லூர் ஆகிய பகுதிகளில் ஏராளமான தெருநாய்கள் சாலைகளில் சுற்றித்திரிகின்றன. இவை இந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளை கடிக்க துரத்துவதினால் அவர்கள் பயத்தில் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். மேலும் சாலையில் செல்லும் குழந்தைகளை தெருநாய்கள் துரத்துவதினால் அவர்கள் பெரிதும் அச்சத்தில் உள்ளனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
ஆபத்தான மின்கம்பம்
திருச்சி ரெங்கன்நகர் 2-வது தெரு சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பம் சிதலமடைந்து சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. எனவே இப்பகுதியில் பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின் கம்பம் முறிந்து விழுந்தால் பெருமளவு உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
குடிநீர் குழாயில் உடைப்பு
திருச்சி தென்னூர், அண்ணா நகர் 4-வது குறுக்குத்தெருவின் முக்கிய சாலையில் குடிநீர் குழாய் உடைந்து, குடிநீர் வீணாகி வருகிறது. இதனால் சம்பந்தப்பட்ட பகுதி மக்களுக்கு போதிய குடிநீர் கிடைக்காமல் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.