தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

பெரம்பலூர்

சுகாதாரமற்ற கழிவறை

பெரம்பலூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு தினமும் ஏராளமான நோயாளிகள் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து சிகிச்சை பெற்ற செல்கின்றனர். இந்த நிலையில் இந்த மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மற்றும் பார்வையாளர்களுக்கு என கழிவறை அமைக்கப்பட்டுள்ளது. இந்த கழிவறை முறையாக பராமரிப்பு இன்றி சுகாதார சீர்கேட்டுடன் காணப்படுவதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

குண்டும், குழியுமான தார்சாலை

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, அயினாபுரம் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள தார் சாலை, அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது சிதிலமடைந்து ஜல்லிக்கற்கள் பெயர்ந்து ஆங்காங்கே குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இரவு நேரத்தில் இந்த சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையில் பள்ளம் இருப்பது தெரியாமல் அதில் வாகனத்தை விட்டு நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

உயிர்பலி வாங்க காத்திருக்கும் மின் கம்பம்

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா விராலிப்பட்டி கிராமத்தில் சாலையோரம் மின் கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின்கம்பம் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதாக தற்போது சிதிலமடைந்து சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. இந்த மின்கம்பம் பொதுமக்கள் நடமாட்டத்தின் போது முறிந்து விழுந்தால் உயிரிழப்புகள் ஏற்படுவதுடன், அப்பகுதியில் உள்ள வீடுகளில் வைக்கப்பட்டுள்ள மின்சாதன பொருட்களும் சேதம் அடைய வாய்ப்பு உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத் துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மதுப்பிரியர்கள் அட்டகாசம்

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், கைகளத்தூரில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் தினந்தோறும் இரவு நேரங்கள் மற்றும் விடுமுறை நாட்களில் மர்மநபர்கள் மது அருந்திவிட்டு, பாட்டில்களை உடைத்துவிட்டு செல்கிறார்கள். மேலும் பள்ளியில் உள்ள ஓடுகளையும் உடைக்கிறார்கள். இதனால் பள்ளி மாணவ-மாணவிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும்

பெரம்பலூர் அருகே மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 2017-18ம் நிதியாண்டில் செங்குணம் அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் ரூ 8.50 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையம் கட்டப்பட்டது. இந்த மையத்தில் குழந்தைகள் ஏறி இறங்கும் படிகளில் தற்போது கைப்பிடி, தடுப்பு சுவர் இல்லாததால் குழந்தைகள் கவனக் குறைவால் செல்லும்போது எதிர்பாராதவிதமாக கீழே விழுந்து காயம் அடையும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே குழந்தைகளின் பாதுகாப்பு நலனை கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.


Next Story