தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

திருச்சி

தேங்கி நிற்கும் மழைநீர்

திருச்சி மாவட்டம், அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பெட்டவாய்த்தலை ஊராட்சியில் காமநாயக்கன்பாளையம் 7-வது வார்டு பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் முறையான வடிகால் வசதி இல்லாததால் மழைபெய்யும்போது மழைநீர் செல்ல வழியின் தாழ்வான பகுதிகளில் தேங்கி நிற்கிறது. இதனால் அவற்றில் இருந்து அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி இப்பகுதியில் மர்ம காய்ச்சல் பரவ அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பிளாஸ்டிக் கவர்களை உண்ணும் கால்நடைகள்

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் தாலுகா, அல்லித்துறை கிராமம், தோகைமலை சாலையோரம் இப்பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் கால்நடைகள் இந்த குப்பைகளில் உள்ள பிளாஸ்டிக் கவர்களை உண்பதினால் அவற்றின் உடல்நிலை பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

ஆபத்தான மின்கம்பம்

திருச்சி மாவட்டம், அல்லித்துறையில் தோகைமலை சாலை ஓரத்தில் மின் கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின் கம்பம் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது சிதிலமடைந்து சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. எனவே பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின்கம்பம் முடிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

எரியாத தெருவிளக்குகள்

திருச்சி மாவட்டம், திருவானைக்காவல் செக்போஸ்ட் அருகில் கொள்ளிடம் புதுப்பாலத்தில் இரவு நேரங்களில் சாலையின் இருபுறமும் உள்ள மின்விளக்குகளும், பாலத்தின் மேல்கூரையில் உள்ள மின்விளக்குகளும் சரிவர எரிவதில்லை. இதனால் அவ்வழியே சமயபுரத்திற்கு பாதயாத்திரையாகவும், வாகனங்களில் செல்பவர்களும் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மேலும் ஏதேனும் அசம்பாவிதங்கள் நடந்து விடுமோ என்ற அச்சத்துடனும் செல்ல வேண்டிய சூழ்நிலை நிலவுகிறது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

ஆபத்தான டெலிபோன் கம்பம்

திருச்சி கலெக்டர் அலுவலக சாலை வெஸ்ட்ரி பள்ளி அருகில் ஆபத்தான நிலையில் டெலிபோன் கம்பம் உடைந்து விழும் நிலையில் உள்ளது. இந்த வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. பொதுமக்கள் நடமாட்டத்தின்போது அவர்கள் மீது முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்படுவதுடன், விபத்து ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி

திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம் செங்கரையூர்-பூண்டி இடையே உள்ள கொள்ளிடம் பாலத்தில் மின் விளக்குகள் எரியவில்லை. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர் என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து எரியாத மின் விளக்குகளை சரிசெய்தனர். இதற்கு அப்பகுதி மக்கள் செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தனர்.


Next Story