தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

புதுக்கோட்டை

ஆபத்தான நிழற்குடை

புதுக்கோட்டை மாவட்டம், குண்ணன்டார்கோவில் ஒன்றியம், புலியூர் ஊராட்சிக்குட்பட்ட நல்லதங்காள்பட்டி பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் வெளியூர் செல்ல வசதியாக கீரனூர்- கிள்ளுக்கோட்டை சாலையில் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிழற்குடை அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது சிதிலமடைந்து சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. பொதுமக்கள் இந்த நிழற்குடையில் நிற்கும்போது இந்த நிழற்குடை இடிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

எரியாத தெருவிளக்குகள்

புதுக்கோட்டை மாவட்டம், கவிநாடு மேல வட்டம் கணபதி நகரில் அமைந்துள்ள தெருவிளக்குகள் கடந்த ஒரு மாதமாக எரியவில்லை. இதனால் இரவு நேரத்தில் பொதுமக்கள் இப்பகுதியில் சென்றுவர மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் இருளை பயன்படுத்தி இப்பகுதியில் சட்ட விரோத செயல்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

சிதிலமடைந்த நீர்த்தேக்க தொட்டி

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் தாலுகா, அன்னவாசல் ஒன்றியம், பரம்பூர் ஊராட்சி 1-வது வார்டு கடம்ரயாபட்டியில் உள்ள மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், அப்பகுதியில் மேல்நிலைநீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது சிதிலமடைந்து எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் நிலையில் உள்ளது. இந்த நீர்த்தேக்க தொட்டி பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இடிந்து விழுந்தால் உயிரிழப்புகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

சேறும், சகதியுமான சாலை

புதுக்கோட்டை மாவட்டம், வடிகாடு அருகே உள்ள கீழாத்தூர் பகுதியில் இருந்து வெள்ளாகுளம் செல்லும் மண் சாலை தற்போது பெய்த மழையால் சேறும், சகதியும் காணப்படுகிறது. இதனால் இந்த சாலை வழியாக செல்லும் இப்பகுதி விவசாயிகள் தங்களது தோட்டங்களுக்கு செல்லமுடியாமல் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். விளை பொருட்களை கொண்டு செல்லவும் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து மண் சாலையை தார்சாலையாக மாற்றி அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

கொசு மருந்து அடிக்கப்படுமா?

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் தாலுகா, திருப்பெருந்துறை ஊராட்சிக்கு உட்பட்ட மீமீசல் ரோடு, மாணிக்க வாசகர் நகர், அம்பாள்புரம் ஆகிய பகுதிகளில் தாழ்வான இடங்களில் அதிக அளவு மழைநீர் மற்றும் சாக்கடை நீர் தேங்குகிறது. இதனால் இப்பகுதி கொசுக்கள் உற்பத்தியாகும் பகுதியாக உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் கொசுத்தொல்லையால் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். கொசுக்கடியால் மர்ம காய்ச்சல் பரவவும் அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் கொசுப்புழு ஒழிப்பு மருந்து தெளிப்பதுடன், இரவு நேரத்தில் கொசு மருந்து அடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.


Next Story