தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
சிதிலமடைந்த மின்கம்பம்
கரூர் மாவட்டம் நொய்யல்- வேலாயுதம்பாளையம் செல்லும் தார் சாலையில் நடையனூர் உள்ளது. இந்த பகுதியில் தார் சாலை ஓரத்தில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு மின் கம்பம் நடப்பட்டது. இந்த மின் கம்பத்தில் மின் கம்பிகள் பிணையப்பட்டு அந்த வழியாக 24 மணி நேரமும் மின்சாரம் செல்கிறது. இந்த மின்கம்பத்தில் இருந்து அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கும், கடைகளுக்கும் மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மின் கம்பம் நடப்பட்டு பல ஆண்டுகள் ஆனதன் காரணமாக மின்கம்பத்தில் உள்ள காங்கிரீட்டுகள் கீழே விழுந்து வருகிறது. இதனால் மின் கம்பத்தில் கம்பிகள் வெளியே தெரிகிறது. தார்சாலை ஓரத்தில் மின்கம்பம் இருப்பதால் திடீரென மின்கம்பம் முறிந்து தார்சாலையில் விழுந்தால் பெரும் விபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
ஆபத்தான மின்கம்பம்
கரூர் மாவட்டம், வாங்கப்பாளையம் அரசு பள்ளி அருகே அருகம்பாளையம் செல்லும் சாலையோரத்தில் மின் கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின் கம்பம் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது சிதிலமடைந்து சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. எனவே பொதுமக்கள் நடமாட்டத்தின் போது இந்த மின் கம்பம் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சார துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.