தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

அரியலூர்

தினத்தந்திக்கு நன்றி

அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் அருணாசலம் நகரில் அமைந்துள்ள தெருக்களில் சாலை அமைக்க கடந்த 6 மாதங்களுக்கு முன்பு செம்மண் கொட்டப்பட்டு மழையில் கரைந்து போய் சாலை அமைக்காமல் தெருக்கள் சேறும், சகதியுமாக இருந்தன. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர் என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து தற்போது அப்பகுதியில் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு அப்பகுதி மக்கள் செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தனர்.

பொதுமக்கள், அருணாசலம் நகர்.

பகுதி நேர அஞ்சலகம் அமைக்கப்படுமா?

அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் காந்தி நகர் பகுதியில் தனியார் சிமெண்டு ஆலை மற்றும் குடியிருப்புகள், அரசு சிறப்பு மாதிரிப் பள்ளி, மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம், அரசு பாலிடெக்னிக் கல்லூரி, வட்டார போக்குவரத்து அலுவலகம், எஸ்.பி.ஐ. பயிற்சி நிறுவனம், சாய்பாபா கோவில் மற்றும் மக்கள் குடியிருப்புக்கள் அமைந்துள்ளன. இங்குள்ளோர் அஞ்சல் சேவைகளுக்கு 2 கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டியுள்ளது.இதனால் அலைச்சலும், காலவிரயமும் ஏற்படுகின்றன. எனவே இப்பகுதியில் பகுதி நேர அஞ்சலகம் ஏற்படுத்த சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பஞ்சநாதன், கீழப்பழுவூர்.


Next Story