தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

திருச்சி

ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?

திருச்சி மாவட்டம், சமயபுரம் சந்தை வாயிலின் 2 பக்கமும் தனி நபர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் 108 ஆம்புலன்ஸ்கள், தீயணைப்பு வாகனம், காய்கறி ஏற்றி செல்லும் லாரிகள் மற்றும் ரேஷன் பொருட்களை ஏற்றி செல்லும் லாரிகள் செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், சமயபுரம்.

தடுப்பு சுவர் அமைக்கப்படுமா?

திருச்சி மாம்பழச்சாலையையும், அண்ணாசிலையையும் இணைக்கும் காவிரி பாலம் சீரமைக்கப்பட்டு விரைவில் போக்குவரத்துக்கும், பொதுமக்கள் பயன்பாட்டிற்கும் வரவுள்ளது. தற்போது சாலைப்பணி நடைபெற்று வரும் நிலையில் வாகனங்கள் செல்வதற்கு ஒருவழியும், வருவதற்கு ஒருவழியுமாக பாலத்தின் மையத்தில் நீண்ட தடுப்பு சுவர் அமைத்தால் எல்லோருக்கும் பயனுள்ளதாகவும் பாதுகாப்பான போக்குவரத்தாகவும் அமையும் என்பது திருச்சி மாநகர மக்கள் அனைவரது விருப்பமாகும். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பரிசீலனை செய்திட வேண்டி கேட்டுக்கொள்கிறோம்.

பரமேஸ்வரன், திருவானைக்காவல்.


Next Story