தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

புதுக்கோட்டை

ஆபத்தை உணராமல் தீ வைப்பு

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் தேர்வு நிலை பேரூராட்சியில் துப்புரவு தொழிலாளர்கள் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் ஆங்காங்கே குப்பைகளை சேகரித்து குப்பை கிடங்குக்கு கொண்டுசேர்க்காமல் ஓரிடத்தில் ஒன்று சேர்த்து தீ வைத்து கொளுத்தி வருகின்றனர். திருச்சி சாலையில் இதேபோல் குப்பைகள் எரிக்கப்படும் போது மிக அருகிலேயே மின் மாற்றி உள்ளது. இதன் அருகே தீ வைப்பதால் பெரும் அளவில் விபத்து ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், கீரனூர்.

விபத்து ஏற்படும் அபாயம்

புதுக்கோட்டை மாவட்டம், முக்கண்ணாமலைப்பட்டி தெற்கு தெருவில் அமைக்கப்பட்டுள்ள சிறு பாலமானது சாலையில் இருந்து ஒரு அடி உயரத்தில் உள்ளது. இதனால் இந்த சாலை வழியாக வேகமாக வரும் வாகன ஓட்டிகள் இதில் மோதி விபத்தில் சிக்கும் அபாயம் நிலை உள்ளது. எனவே பெரிய அளவிலான விபத்துகள் ஏற்படும் முன்பு இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், முக்கண்ணாமலைப்பட்டி.

குண்டும், குழியுமான சாலை

புதுக்கோட்டை மாவட்டம், காரையூர் அருகே உள்ள ஆவாம்பட்டியில் இருந்து படுதிணிப்பட்டி வழியாக சடையம்பட்டி வரை செல்லும் தார்சாலை அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது சிதிலமடைந்து ஆங்காங்கே குண்டும், குழியுமாக காணப்படுகிறது. சில இடங்களில் மண் சாலை போல் காட்சி அளிக்கிறது. இதனால் இந்த சாலை வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், ஆவாம்பட்டி.

எரியாத உயர்மின் கோபுர விளக்கு

புதுக்கோட்டை- மதுரை தேசிய நெடுஞ்சாலையில், நெடுஞ்சாலையில் இருந்து திருமயம் ஊருக்கு உள்ளே செல்லும் வழியில் இரவு நேரத்தில் செல்லும் வாகன ஓட்டிகளின் வசதிக்காக உயர்மின் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின்விளக்கு கடந்த 5 மாதங்களாக எரியாமல் உள்ளது. இதனால் இரவு நேரத்தில் இப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுவதினால் சட்ட விரோத செயல்களும், விபத்துகளும் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பாலமுருகன், திருமயம்.


Next Story