'தினத்தந்தி' புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
ஊருணி தூர்வாரப்படுமா?
ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டினம் அருகே பண்ணக்கரை கிராமத்தில் உள்ள ஊருணி தூர்வாரப்படாமல் உள்ளது. இந்த ஊருணி தூர்வாரப்படாததால் தண்ணீர் விரைவாக வற்றி விடுகிறது. எனவே ஊருணியை தூர்வார சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
சீனி ஜலாலுதீன், பண்ணகரை.
குடிநீர் தட்டுப்பாடு
ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் குடிநீர் தட்டுப்பாடு தொடர்கிறது. வார்டுகளில் குடிக்க தண்ணீர் இல்லாமல் நோயாளிகள் மிகுந்த அவதிக்குள்ளாகினர். எனவே அதிகாரிகள் ஆஸ்பத்திரியில் கூடுதல் குடிநீர் வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அஸ்மாபாக் அன்வர்தீன், ராமநாதபுரம்.
குண்டும் குழியுமான சாலை
ராமநாதபுரம் பாரதி நகர், டி.பிளாக், அம்மா பூங்கா வழியாக சேதுபதி நகர் வடக்கு 2-வது மெயின் ரோடு முதல் காட்டூரணி வரை செல்லும் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் இந்த சாலையில் செல்வோர் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மனோகரன், ராமநாதபுரம்.
போக்குவரத்து நெரிசல்
ராமநாதபுரம் நகர் பகுதியில் கனரக வாகனங்கள் அதிகம் செல்வதால் காலை மற்றும் மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்வோர் போக்குவரத்து நெரிசலால் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே போக்குவரத்து நெரிசலை தவிர்க்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிவகுமார், ராமநாதபுரம்.
சேதமடைந்த அங்கன்வாடி கட்டிடம்
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள எஸ்.ஆர்.என். பழங்குளம் கிராமத்தில் செயல்படும் அங்கன்வாடி கட்டிடம் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் அங்கன்வாடிக்கு குழந்தைகளை அனுப்ப மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே அங்கன்வாடி கட்டிடத்தை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முத்துவேல், முதுகுளத்தூர்.