'தினத்தந்தி' புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

மதுரை

செயல்படாத கண்காணிப்பு கேமரா

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் நகர் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் செயல்படாமல் காணப்படுகிறது. பஸ் நிலையம், தேரிருவேலி ரோடு, கடலாடி ரோடு, அரசு மருத்துவமனை, ஆற்றுப்பாலம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் பழுதாகி உடைந்து தொங்குகின்றன. இதனால் குற்றச்செயல்கள் நடந்தாலும் அதனை கண்காணிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சக்தி, முதுகுளத்தூர்.

கண்மாயில் உடைப்பு

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வட்டம் சூரக்குடி ஊராட்சி கே.நெற்புகப்பட்டியில் உள்ள பெரிய கண்மாய் இந்த பகுதி மக்களின் முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது. தற்போது கண்மாயில் உள்ள சின்னமடையில் உடைப்பு ஏற்பட்டு நீர் வீணாகி வெளியேறி வருகிறது. இதனால் இதனை நம்பியுள்ள விவசாயம் போன்ற தொழில்வளங்கள் பாதிக்கப்படுகிறது. எனவே விவசாயிகளின் நலன் கருதி கண்மாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்ைக எடுப்பார்களா?

கருப்பையா, கே.நெற்புகப்பட்டி.

பள்ளத்தால் மாணவர்கள் அவதி

மதுரை மாவட்டம் செல்லூர்- குலமங்கலம் மெயின் ரோடு பகுதியில் மருத்துவமனை, பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த சாலையில் குடிநீர் குழாய் பதிக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. பணி நிறைவடைய கால தாமதம் ஆவதால் தோண்டப்பட்ட பள்ளத்தின் வழியாக பயணிக்க முடியாமல் வாகனஓட்டிகள், பள்ளி மாணவர்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். எனவே குடிநீர் குழாய் பதிக்கும் பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தனராஜ், மீனாம்பாள்புரம்.

குடிநீர் தட்டுப்பாடு

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தாலுகா செட்டியார் பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட அனைத்து வார்டுகளிலும் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. வாரத்தில் குறிப்பிட்ட நாட்கள் மட்டும் வினியோகிக்கப்படும் குடிநீரும் போதுமானதாக இல்லை. குடிநீரை காசு கொடுத்து வாங்கி குடிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். எனவே நகரின் அனைத்து பகுதிகளிலும் தட்டுப்பாடின்றி குடிநீர் வினியோகிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தாவீதுபெரியதாஸ், செட்டியார்பட்டி.

தேங்கி கிடக்கும் குப்பை

மதுரை மாவட்டம் பெத்தானியாபுரம் பகுதியில் உள்ள பூங்கா முழுவதும் குப்பைகள் அதிக அளவில் சூழ்ந்துள்ளன. இதனால் இந்த பகுதி சுகாதார சீர்கேடுடன் காணப் படுகிறது. மேலும் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் வாய்ப்பு உள்ளது. எனவே பூங்காவில் தேங்கிய குப்பையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பார்வதி, பெத்தானியாபுரம்.

சுகாதார சீர்கேடு

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி கண்மாய்கரை பகுதியில் குப்பைகள் குவித்து வைக்கப்பட்டு உள்ளன. இதனால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும் இங்குவரும் பொதுமக்கள் துர்நாற்றம் காரணமாக மூக்கை பிடித்து செல்லும் நிலை உள்ளது. எனவே இதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அசரப், இளையான்குடி.

வேகத்தடை வேண்டும்

மதுரை மாவட்டம் செல்லூர் பாலம் ஸ்டேஷன் ரோடு தத்தனேரி சுரங்க பாதையில் உள்ள சாலையில் சிலர் அதிக வேகத்தில் வாகனங்களில் செல்கின்றனர். இதனால் பாதசாரிகள் ஒருவித அச்ச உணர்வுடனே சாலையில் நடக்கின்றனர். அதிக வேகத்தால் வாகனஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே வாகன ஓட்டிகளின் வேகத்தை கட்டுப்படுத்த சாலையில் வேகத்தடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சந்தனகுமார், கீழகைலாசபுரம்.

அடிப்படை வசதி வேண்டும்

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகா எழுவணி ஊராட்சி சேந்தநதி கிராமத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் சாலை, பஸ், மருத்துவமனை, பள்ளி போன்ற அடிப்படை வசதிகள் இல்லை. பள்ளி மாணவர்கள் தங்கள் படிப்புக்காகவும், முதியோர்கள் மருத்துவ வசதிக்காகவும் நீண்ட தூரம் சென்றுவர வேண்டிய நிலை உள்ளது. இதனால் அவர்களின் உடல் நிலை பாதிக்கப்படுகிறது. எனவே கிராமத்தில் மேற்கூறிய அனைத்து வசதிகளையும் செய்துதர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

பொதுமக்கள், திருச்சுழி.

சாலையில் சுற்றித்திரியும் மாடுகள்

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பகுதியில் ஏராளமான மாடுகள் சாலையில் சுற்றித்திரிகின்றன. இதனால் வாகனஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே கோவில் மாடுகளை பராமரிக்க கோசாலை அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுந்தர், சிங்கம்புணரி.

எரியாத தெருவிளக்கு

மதுரை மாவட்டம் எம்.கல்லுப்பட்டி பஸ் நிலையத்தில் உள்ள உயர்கோபுர மின்விளக்கு எரியாமல் உள்ளது. இரவு நேரங்களில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் வாகனஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. மேலும் இருட்டை பயன்படுத்தி திருட்டு போன்ற சம்பவங்களும் நிகழ வாய்ப்பு உள்ளது. எனவே பஸ் நிலையத்தில் உள்ள தெருவிளக்கை சரிசெய்ய சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருப்பதி, எம்.கல்லுப்பட்டி.

தொற்றுநோய் அபாயம்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி தாலுகா பொபிலிப்பட்டி கிராமத்தில் வாறுகால் வசதியின்றி கழிவுநீர் சாலையில் வெளியேறி வருகிறது. இதனால் சாலையில் வாகனங்கள் பயணிக்க, பொதுமக்கள் நடக்க பாதையின்றி சிரமப்படுகின்றனர். மேலும் தேங்கிய கழிவுநீரில் இருந்து துர்நாற்றம் வீசுவதோடு, தொற்றநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கழிவுநீர் செல்ல வாறுகால் அமைத்து தர சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா?

மகேஷ், சிவகாசி.

குண்டும், குழியுமான சாலை

மதுரை மாவட்டம் கூடல்நகர்- அலங்காநல்லூர் சாலை மற்றும் பழங்காநத்தம்- திருப்பரங்குன்றம் பாலம் வரை உள்ள சாலை குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இந்த சாலையில் வாகனஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். எனவே வாகன ஓட்டிகளின் நலன் கருதி சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மனோகரன், மதுரை.


Next Story