'தினத்தந்தி' புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
புதிய ரேஷன் கடை வேண்டும்
மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா கொட்டாம்பட்டி வடக்கு ஒன்றியம் பாண்டாங்குடி கிராமத்தில் உள்ள ரேஷன் கடை இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் இந்த பகுதியில் உள்ள மக்கள் ஒருவித அச்ச உணர்வுடனே ரேஷன் கடைக்கு வந்து செல்கின்றனர். எனவே இந்த பகுதியில் புதிய ரேஷன் கடை கட்டித்தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், பாண்டாங்குடி.
ஒளிராத மின்விளக்கு
மதுரை மாநகராட்சி 62-வது வார்டு அம்பலக்காரர் தெருவில் உள்ள தெருவிளக்குகள் பல நாட்களாக எரியாமல் உள்ளது. இதனால் இந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் இரவு நேரங்களில் பொதுமக்கள் வெளியே வர அச்சப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் எரியாமல் உள்ள மின்விளக்குகளை சரி செய்திட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராஜன், கோச்சடை,
போக்குவரத்துக்கு இடையூறு
மதுரை ஆரப்பாளையம் பஸ் நிலையம் நுழையும் இடத்தில் அதிகம் பேர் இருசக்கர வாகனத்தை நிறுத்துவதால் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளது. இதனால் இந்த பகுதியில் செல்வோர் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் இருசக்கர வாகனத்தை நிறுத்துவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செந்தில், ஆரப்பாளையம்,
சுகாதார சீர்கேடு
மதுரை மாநகராட்சி 54-வது வார்டு அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் எதிரில் உள்ள பெட்ரோல் பங்க் அருகில் கழிவுநீர் பல நாட்களாக சாலையில் செல்கிறது. இதனால் இந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் கொசுத் தொல்லையும் அதிகரித்து காணப்படுகிறது. எனவே சாலையில் கழிவுநீர் செல்வதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், மதுரை.
தெருவிளக்கு வேண்டும்
மதுரை மாவட்டம் மாட்டுத்தாவணி ரிங்ரோடு தெரு பகுதியில் போதிய மின்விளக்குகள் இல்லாததால் சாலை முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் இரவு நேரங்களில் பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் சாலையில் செல்ல மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் கூடுதல் தெருவிளக்குகள் அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுஜாதா, மாட்டுத்தாவணி