'தினத்தந்தி' புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
எரியாத மின்விளக்கு
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகா பொட்டிதட்டி கிராமம் அம்மன் கோவில் அருகே உள்ள உயர் கோபுர மின்விளக்கு எரியாமல் பல மாதங்களாக உள்ளது. இதனால் இந்த பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது எனவே இந்த பகுதியில் உள்ள உயர் கோபுர மின்விளக்கை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராம்குமார், பொட்டிதட்டி.
அனுமதியின்றி நிறுத்தப்படும் வாகனங்கள்
ராமேசுவரத்தில் உள்ள சாலையோரங்களில் வாடகை கார், ஆட்டோ போன்ற வாகனங்கள் அதிக அளவில் நிறுத்தப்படுகிறது. இதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால், தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையில் அனுமதியின்றி நிறுத்தப்படும் வாகனங்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாரிமுத்து, ராமேசுவரம்.
நடவடிக்கை தேவை
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை தாலுகா சுத்தமல்லி கிராமத்தில் உள்ள புத்தர் சிலை பராமரிப்பு இன்றி காணப்படுகிறது. எனவே இந்த சிலை சேதமடைவதற்குள் பராமரித்து பாதுகாக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், திருவாடானை.
கொசுத்தொல்லை
ராமநாதபுரம் சாலை தெருவில் இரவு நேரங்களில் கொசுத்தொல்லை அதிகமாக காணப்படுகிறது. இதனால் இந்த பகுதியில் உள்ளவர்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இந்த பகுதியில் கொசு மருந்து அடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முருகானந்தம், ராமநாதபுரம்.
சேதமடைந்த சாலை
ராமநாதபுரம் மாவட்டம் சித்தார்கோட்டை சமத்துவபுரத்தில் இருந்து தேவிபட்டினத்தை சந்திக்கும் ஒரு வழி சாலை பல ஆண்டுகளாக சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் இந்த சாலையில் பயணிக்கும் வாகனங்கள் அவ்வப்போது பழுது அடைந்து வருகிறது. எனவே இந்த சாலையை விரைவாக சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பிரபாகர், சமத்துவபுரம்.