'தினத்தந்தி' புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
சேதமடைந்த சாலை
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலுகா பெருநாழி அருகில் டி.குமராபுரம் சாலை மிகவும் மோசமான நிலையில் சேதமடைந்து உள்ளது. இதனால் இந்த சாலையில் பயணிப்பவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பூமிநாதன், டி.குமராபுரம்.
அடிக்கடி ஏற்படும் மின்தடை
ராமநாதபுரம் மாவட்டம் இருமேனி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இதனால் இந்த பகுதியில் உள்ள மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் இந்த பகுதியில் உள்ள பல மின்கம்பங்கள் சேதமடைந்து காணப்படுகிறது. எனவே இந்த பகுதியில் அடிக்கடி ஏற்படும் மின்தடை மற்றும் சேதமடைந்த மின்கம்பங்களை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சேகர், இருமேனி.
குவிந்து கிடக்கும் குப்பைகள்
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் 15-வது வார்டு தேவந்திரர் நகர் காதக்குளம் ரோட்டின் ஓரத்தில் குப்பைகள் அதிக அளவில் குவிந்துள்ளன. இதனால் இந்த சாலையில் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. எனவே சாலை ஓரத்தில் குப்பைகள் குவியாத வண்ணம் அவ்வப்போது அகற்ற வேண்டும்.
மோகேஷ், முதுகுளத்தூர்.
ஊருணியில் கலக்கும் கழிவுநீர்
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பேரூராட்சிக்குட்பட்ட பெருமாள் ஊருணியில் கழிவுநீர் கலக்கிறது. இதனால் ஊருணியின் தரம் குறைந்து மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. எனவே ஊருணியில் கழிவுநீர் கலப்பதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தடுக்க வேண்டும்.
ராஜபாண்டியன், சாயல்குடி.
நிற்காமல் செல்லும் பஸ்கள்
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பேரூராட்சியில் பல பஸ்கள் சரிவர நிற்பதில்லை. இதனால் இந்த பகுதியில் உள்ள மக்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு குறித்த நேரத்தில் செல்ல முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் பஸ்கள் நின்று செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், மண்டபம்.