'தினத்தந்தி' புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

மதுரை

ஆக்கிரமிப்பு

மதுரை டி.பி.கே. சாலையில் ஆக்கிரமிப்பு நிறைந்து காணப்படுகிறது. இதனால் இந்த வழியாக செல்பவர்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுந்தர், மதுரை.

விபத்து அபாயம்

மதுரை மாவட்டம் கிரியகவுண்டன்பட்டி கிராமத்தில் ஆதிதிராவிடர் காலனியில் அங்கன்வாடி மையத்தின் அருகில் உள்ள ஆழ்துளை கிணற்றின் மூடி உடைந்து உள்ளது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினேஷ், கிரியகவுண்டன்பட்டி.

ெதருவிளக்கு வேண்டும்

மதுரை மாவட்டம் கோச்சடை பஸ் நிறுத்தம் அருகில் போதுமான தெருவிளக்குகள் இல்லை. இதனால் இங்கு இரவு நேரத்தில் பஸ்சுக்காக காத்திருக்கும் மக்கள் அவதிப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் தேவையான தெருவிளக்குகளை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராஜன், கோச்சடை.

போக்குவரத்து நெரிசல்

மதுரை மாநகராட்சி 69-வது வார்டு வடக்குமாசி வீதி, கீழமாசி வீதியில் ஆக்கிரமிப்பு அதிகமாக உள்ளது. இதனால் இந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் இந்த சாலையில் செல்வோர் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், மதுரை.

குண்டும், குழியுமான சாலை

மதுரை பால்மார்க் குறுக்கு தெருவில் ஸ்மார்ட் சிட்டிக்கு குடிநீர், சாக்கடைக்காக குழாய்கள் பதித்த பின்பு சாலைகளை சரிசெய்யாததால் குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இந்த சாலையில் செல்வோர் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்.

கண்ணன், மதுரை.


Related Tags :
Next Story