'தினத்தந்தி' புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

மதுரை

கண்காணிப்பு கேமரா சரிசெய்யப்படுமா?

மதுரை மாவட்டம் சோழவந்தான் வைகை ஆற்றின் கரையோரம் வட்ட பிள்ளையார் கோவில் அருகே உள்ள கண்காணிப்பு கேமரா தரையை நோக்கி உள்ளது. இதனால் இப்பகுதி கண்காணிக்கப்படுவது தடைபடுகிறது.எனவே கேமராவை சரிசெய்திட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மோகன், மன்னாடிமங்கலம்.

டாஸ்மாக் கடை இடமாற்றப்படுமா?

மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா பாண்டாங்குடியில் கூத்தினி காட்டு அய்யனார் கோவில் அருகில் டாஸ்மாக் கடை உள்ளதால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. இந்த கடையை வேறு இடத்திற்கு மாற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

பொதுமக்கள், பாண்டாங்குடி.

தார்ச்சாலை அமைக்கப்படுமா?

மதுரை மாநகர் 22-வது வார்டு சூசை நகர் 2-வது தெருவில் மழைக்காலங்களில் சாலையில் மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது. இதனால் சிலர் கீழே விழுந்து காயம் அடைகின்றனர். எனவே இப்பகுதியில் தார்ச்சாலை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மனோகரன், மதுரை.

நடவடிக்கை தேவை

மதுரை மாவட்டம் சோழவந்தானில் இருந்து மன்னாடி மங்கலம் கிராமத்திற்கு செல்லும் சாலையில் உள்ள இரட்டை வாய்க்கால் பாலத்தின் பக்கவாட்டில் மழையின் காரணமாக சாலை அடித்து செல்லப்பட்டது. இதனால் அவ்வழியே செல்ல வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இதனை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராஜ், மன்னாடிமங்கலம்.

பன்றிகள் தொல்லை

மதுரை மாவட்டம் திருப்பாலை தரமணி மலர் தெருவில் சமீப காலமாக பன்றிகளின் தொல்லை அதிகரித்து வருகிறது. இதனால் இப்பகுதி சுகாதார சீர்கேடுடன் காணப்படுகிறது. மேலும் கழிவுநீர் சாலையில் வெளியேறி வருகிறது. எனவே இதற்கு சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தீபா கணேஷ், திருப்பாலை.


Related Tags :
Next Story