'தினத்தந்தி' புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

மதுரை

சேறும் சகதியுமான சாலை

மதுரை மாநகராட்சி கிழக்கு ஒன்றியம் மஸ்தான்பட்டி பகுதி தெருக்களில் உள்ள சாலைகள் சேதமடைந்து மழைக்காலங்களில் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத வகையில் சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

செல்வராஜ், மஸ்தான்பட்டி.

சாலை அகலப்படுத்தப்படுமா?

மதுரை மாவட்டம் மேலூரில் இருந்து கோட்டநத்தம் பட்டி வரை செல்லும் சிவகங்கை மெயின் ரோடு இருவழிச்சாலையாக போடப்பட்டுள்ளது. ஆனால் இந்த சாலை குறுகலாக இருப்பதால் வாகனங்கள் ஒன்றையொன்று முந்தி செல்லும் போது விபத்துகள் ஏற்படுகிறது. எனவே இந்த சாலையை அகலப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

சுந்தர்ராஜன், மதுரை.

போக்குவரத்து நெரிசல்

மதுரை மாநகர் மாட்டுதாவணியில் இருந்து மேலூர் செல்லும் சாலையில் காலை மற்றும் மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் இந்த வழியே செல்லும் மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்வோர் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுபாஷ், மதுரை.

தெருவிளக்குகள் எரியுமா?

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றியம் குட்டிமேய்க்கன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கோவிலூர் கிராமத்தில் தெரு விளக்குகள் எரியவில்லை. இதனால் அப்பகுதி மக்கள், இரவு நேரங்களில் வெளியே செல்ல முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மணி, கோவிலூர்.

சேதமடைந்த சாலை

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகேயுள்ள குலசேகரன் கோட்டை மீனாட்சியம்மன் கோவில் செல்லும் சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனால் கோவில் செல்லும் பக்தர்கள் மற்றும் பள்ளி மாணவ -மாணவிகள், பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சாலையை சீரமைக்க வேண்டும்.

பொதுமக்கள், வாடிப்பட்டி.


Related Tags :
Next Story