பொதுமக்கள் குறைகளை தொிவிக்கும் தினத்தந்தி புகாா் பெட்டி


பொதுமக்கள் குறைகளை தொிவிக்கும் தினத்தந்தி புகாா் பெட்டி
x
தினத்தந்தி 12 Oct 2022 7:30 PM GMT (Updated: 12 Oct 2022 7:30 PM GMT)

புகாா் பெட்டி

ஈரோடு

குண்டும், குழியுமான ரோடு

கோபியில் உள்ள சத்தியமங்கலம் ரோட்டில் அண்ணா பாலம் எதிரில் ஒரு கடை அருகில் ரோடு குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. இரவு நேரங்களில் அந்த வழியாக வாகனங்கள் வந்தால் ரோட்டில் உள்ள பள்ளங்கள் வாகன ஓட்டிகளுக்கு தெரியாது. இதனால் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே ரோட்டை சீரமைக்க சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், கோபி

தடுமாற வைக்கும் குழிகள்

ஈரோடு மாநகராட்சி (வார்டு 20) பெரியவலசு மெயின் ரோடு முக்கிய சாலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு தனியார் தொலைதொடர்பு நிறுவனத்தால் அங்குமிங்குமாக குழிதோண்டினார்கள். அதை முழுமையாக முடிக்காமல், அரைகுறையாக குழிகளை மூடாமல் விட்டு சென்றுவிட்டனர். இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் தடுமாறி கீழே விழுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குழிகளை முறையாக மூடுவதற்கு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், பெரியவலசு.

ரோட்டில் பள்ளம்

பர்கூர் மலை பகுதியில் இருந்து கர்கேகண்டி செல்லும் மைசூரு ரோட்டில் குந்துகெட்டு என்ற இடத்தில் பெரிய குழி உள்ளது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தை சந்திக்கிறார்கள். கார் உள்ளிட்ட 4 சக்கர வாகனங்களில் வருபவர்கள் நிலை தடுமாறுகிறார்கள். எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் குந்துக்கெட்டு ரோட்டில் உள்ள பெரிய குழியை உடனே சரிசெய்வார்களா?

சந்திரன், அந்தியூர்.

பழுதடைந்த சாலை

கோபி டவுனில் முத்துஷா வீதிக்கு ஒரு ரோடு செல்கிறது. அந்த ரோடு குண்டும், குழியுமாக பழுதடைந்து மோசமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே பழுதடைந்த ரோட்டை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், கோபி

புதர்களை அகற்ற வேண்டும்

ஈரோடு அருகே 46 புதூரில் உள்ள தபால் நிலையத்தை சுற்றிலும் செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டி காணப்படுகிறது. மேலும் கட்டிடம் முழுவதும் சேதமடைந்தும், செடிகள் வளர்ந்தும் உள்ளது. உடனே புதர்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், 46 புதூர்

வடிகால் வசதி

ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட 5-வது வார்டில் இ.எம்.எஸ். நகர் முதல் வீதியில் சாக்கடை வடிகால் வசதி முறையாக அமைக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டு் வருகிறார்கள். உடனே சாக்கடை வடிகால் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், ஈரோடு.

ரோடு சீரமைக்கப்படுமா?

ஈரோடு கருங்கல்பாளையம் கே.என்.கே. ரோடு குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் தடுமாறி கீழே விழுந்து விபத்துகளை சந்திக்கின்றனர். உடனே ரோட்டை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், கருங்கல்பாளையம்.


Next Story