தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

மதுரை

போக்குவரத்து நெரிசல்

மதுரை மாவட்டம் மேலூர் பெரியகடை வீதியில் அழகர்கோவில் சாலை திரும்பும் பகுதியில் காலை நேரத்தில் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் சிரமப்படுகின்றனர். எனவே போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாண்டித்துரை, சந்தைப்பேட்டை, மதுரை.

நடவடிக்கை தேவை

மதுரை மாவட்டம் சோழவந்தானில் போக்குவரத்து ெநரிசல் அதிகமாக உள்ளது. இதனால் சோழவந்தானில் குறிப்பிட்ட பகுதியை ஒரு வழி பாதையாக மாற்றினால் போக்குவரத்து நெரிசல் குறையும். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கவுரிநாதன், மதுரை.

தெருநாய்கள் தொல்லை

மதுரை 84-வது வார்டு சித்தி விநாயகர் கோவில் தெருவில் தெருநாய்களின் தொல்லை அதிகரித்து காணப்படுகிறது. இந்த நாய்கள் சாலையில் செல்லும் வாகனஓட்டிகள், நடைபாதையினருக்கு இடையூறுகள் ஏற்படுத்தும் விதமாக அவர்களை துரத்துகிறது. இதனால் பொதுமக்கள் வீதிகளுக்கு செல்லவே அச்சப்படுகின்றனர். எனவே இந்த நாய்களை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அப்துல், மதுரை.

தீர்வு கிடைக்குமா?

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சியில் 24 வார்டுகளின் கழிவுநீர் கவுண்டன்பட்டி பகுதியில் கலக்கின்றது. கழிவுநீரில் பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகள் ஆகியன கலந்து வருகிறது. இதனால் கழிவுகள் இப்பகுதியில் தேங்கி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துவதுடன் தொற்றுநோய் பரவும் அபாயம் நிலவுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் இதற்கு தீர்வுகாண நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முத்தமிழ் செல்வன், உசிலம்பட்டி, மதுரை.

சுகாதாரமற்ற தண்ணீர் தொட்டி

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே சவுடார்பட்டி கிராமத்தில் சாலை அருகில் தண்ணீர் தொட்டி உள்ளது. இந்த தொட்டி தற்போது சுகாதாரமற்று காணப்படுகிறது. இதனால் அந்த தண்ணீரை பயன்படுத்த பொதுமக்கள் ஒருவித தயக்கம் காட்டுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் தொட்டியை சுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், சவுடார்பட்டி, மதுரை


Next Story