தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

மதுரை

வேகத்தடை வேண்டும்

மதுரை ஊமச்சிகுளம் அருகே திருமால்புரம் அரசு ஒன்றிய தொடக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளியின் இருபுறமும் வாகனங்கள் அசுர வேகத்தில் செல்கின்றன. இதனால் பள்ளி மாணவர்கள் சாலையில் நடந்து செல்ல அச்சப்படுகின்றனர். எனவே இப்பகுதியில் வேகத்தடை அமைக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க முன் வருவார்களா?

கார்த்திக்ராஜா, தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்திருமால்புரம்.

ஆபத்தான மின்கம்பம்

மதுரை கிழக்கு 3-வது வார்டு ஆனையூர் 2-பிட் கருப்பசாமி நகர் 2-வது தெருவில், கழிவுநீர் தேங்கியுள்ளது.இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது. மேலும் இப்பகுதியில் உள்ள மின்கம்பம் சேதமடைந்து காணப்படுகிறது. மின்கம்பத்தின் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து ஆபத்தான நிலையில் உள்ளது. எனவே ஆபத்தான மின்கம்பத்தை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா?

பிரபாகரன், மதுரை.

தேங்கி நிற்கும் கழிவுநீர்

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கக்கன் காலனி பகுதியில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் நடைபாதையினர், வாகனஓட்டிகள் சாலையில் ெசல்ல முடியாமல் சிரமம் அடைகின்றனர். மேலும் தேங்கிய கழிவுநீரால் தொற்றுநோய் பரவும் அபாயம் நிலவுகிறது. எனவே கழிவுநீர் தேங்குவதை தடுக்க நடவடிக்கை தேவை.

கிருஷ்ணபிரகாஷ், மேலூர்.

சாலையில் கொட்டப்படும் குப்பைகள்

மதுரை திருமங்கலத்திற்கு உட்பட்ட கிராமப்புற பகுதிகளில் சில இடங்களில் குப்பைகள் சாலையில் கொட்டப்படுகிறது. இதனால் குப்பைகள் குவிந்து துர்நாற்றம் வீசுகிறது. மேலும் குவியும் குப்பைகளில் பெரும்பாலும் பாலித்தீன் பைகள் அதிக அளவில் சேர்கின்றன. இதனால் சுற்றுச்சூழல், சுகாதாரம் பாதிக்கப்படும் சூழல் ஏற்படுகிறது. எனவே குப்பைகளை சாலையில் கொட்டுவதை தடுக்க வேண்டும்.

சிவா, திருமங்கலம்.

போக்குவரத்துக்கு இடையூறு

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பஸ் நிலையம் பகுதியில் சிலர் தங்கள் இருசக்கர வாகனங்களை சாலையில் ஆங்காங்கே நிறுத்தி செல்கின்றனர். இதனால் அந்த சாலையில் மற்ற வாகனங்கள், பாதசாரிகள் சென்று வர சிரமமாக உள்ளது. எனவே சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகன ஓட்டிகள் மீது கடும் நடவடிக்கை எடுப்பார்களா?

விஜய், உசிலம்பட்டி.







Next Story