தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

மதுரை

தாழ்வாக செல்லும் மின்கம்பி

மதுரை மாவட்டம் சோழவந்தான் ரெயில்வே மேம்பாலப் பணிகள் நிறைவடைந்ததையொட்டி கடந்த சில நாட்களாக கூடுதல் கனரக வாகனங்கள் ரெயில்வே பீடர் ரோடு வழியாக செல்கிறது. அவ்வாறு செல்லும்போது தாழ்வாக தொங்கிக்கொண்டிருக்கும் மின்கம்பிகளை உரசி செல்கிறது. இதனால் அடிக்கடி இரவு நேரங்களில் மின்வெட்டு ஏற்பட்டு பொதுமக்கள் அவதியடைகின்றனர். எனவே தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை உயர்த்தி அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கதிரவன், சோழவந்தான், மதுரை.

கூடுதல் பஸ் இயக்கப்படுமா?

மதுரை கிழக்கு தாலுகாவிற்கு உட்பட்ட புதுத்தாமரைப்பட்டி மற்றும் அதன் சுற்றுப்புற கிராம பகுதியில் இருந்து தினந்தோறும் ஏராளமான பள்ளி மாணவர்கள், தினக்கூலி தொழிலாளர்கள் வணிக ரீதியாக அருகில் உள்ள ஊர்களுக்கு பயணிக்கின்றனர். இவர்களுக்கு போதிய பஸ் வசதியின்றி பஸ்களில் படிக்கட்டுகளில் ஆபத்தான பயணம் செய்கின்றனர். எனவே இப்பகுதியில் காலை, மாலை வேளைகளில் கூடுதல் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முத்துமாயன், புதுத்தாமரைப்பட்டி, மதுரை.

சுற்றுச்சூழல் பாதிப்பு

மதுரை கடச்சனேந்தல் நரசிங்கம் ரோட்டில் சிலர் குப்பைகளை எரிக்கின்றனர். இதனால் காற்று மாசடைவதுடன், சுற்றுச்சூழல் பாதிப்படையும் நிலை ஏற்படுகிறது. மேலும் இப்பகுதியை சேர்ந்த முதியோர், குழந்தைகள் சிரமப்படுகின்றனர். எனவே இப்பகுதியில் குப்பைகள் எரியூட்டப்படுவதை தடுக்க வேண்டும்.

கண்மாயில் ஆகாயத்தாமரைகள் ஆக்கிரமிப்பு

மதுரை வண்டியூர் கண்மாயில் ஆகாயத்தாமரைகளின் ஆக்கிரமிப்பு அதிக அளவில் உள்ளது. இதனால் கண்மாயில் நீரை சேமிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே கண்மாயை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பேச்சியப்பன், மதுரை.

குறுகலான சாலைதினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

மதுரை வடக்கு வெளிவீதி சாலையில் வக்கீல் புதுத்தெரு முதல் தலைமை அஞ்சலகம் வரை குறுகலான சாலையின் நடுவில் இடைவெளி இல்லாமல் தடுப்புசுவர் பேரிகார்டர்கள் உள்ளது. இதனால் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல முடியவில்லை. எனவே இதற்கு தீர்வு காண சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அன்புமணி, மதுரை.


Next Story