தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

விருதுநகர்

கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?

விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியில் இருந்து சுற்றியுள்ள கிராமங்களுக்கு இயக்கப்படும் டவுன் பஸ்களின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை. இதனால் இந்த பகுதியில் உள்ளவர்கள் குறித்த நேரத்தில் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், சிவகாசி.

சேதமடைந்த சுவர்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் 24-வது வார்டு தெற்கு ரத வீதியில் உள்ள அங்கன்வாடி மையத்தின் முன்பகுதியில் உள்ள சுவரின் அடிப்பகுதி மிகவும் சேதமடைந்து உள்ளது. மேலும் அருகில் உள்ள தடுப்பு சுவரும் சேதமடைந்து உள்ளது. எனவே விபத்து ஏதும் ஏற்படும் முன்னர் சுவரை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குமார், சாத்தூர்.

பொதுமக்கள் அவதி

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை தாலுகா கொருக்காம்பட்டியில் நாய்கள் தொல்லை அதிக அளவில் உள்ளது. இந்த பகுதியில் உள்ள பலர் நாய்க்கடியால் பாதிக்கப்படும் நிலை உள்ளது. ஆதலால் இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் உள்ள நாய்களை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், கொருக்காம்பட்டி.

நாய்கள் தொல்லை

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் நாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சாலையில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.

பொன்னுச்சாமி, ராஜபாளையம்.

சாலை வசதி வேண்டும்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள சிங்கம்மாள்புரம் தெருவில் முறையான சாலை வசதி இல்லை. இங்கு 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். முறையான சாலை வசதி இல்லாததால் இங்குள்ளவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.

பொதுமக்கள், ஸ்ரீவில்லிபுத்தூர்.


Next Story