தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
வீணாகும் குடிநீர்
விருதுநகர் மாவட்டம் முகவூர்-சேத்தூர் சாலையில் பல இடங்களில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாக செல்கிறது. இந்த சாலையில் பயணிப்பதால் வாகனஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடையும் நிலை உள்ளது. எனவே குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பூங்கா அமைக்கப்படுமா?
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள செட்டியார்பட்டி பேரூராட்சியில் அமைந்துள்ள 9-வது வார்டு பகுதியில் பூங்கா இல்லை. இந்த பகுதியில் ் பூங்கா அமைத்தால் மக்கள் நடைபயிற்சி, உடற்பயிற்சி செய்ய ஏதுவாக இருக்கும். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்
போக்குவரத்து நெரிசல்
விருதுநகர் மாவட்டம் சிவகாசி பஸ் நிலையம் எதிரே உள்ள தங்கையா நாடார் ரோட்டில் காலை மற்றும் மாலை நேரங்களில் தனியார் வாகனங்கள் சாலையில் இருபுறமும் நிறுத்தி வைக்கப்படுவதால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. நெரிசலில் சிக்கி வாகனஓட்டிகள் அவதியடைகின்றனர். எனவே இப்பகுதியில் போக்குவரத்திற்கு இடையூறு விளைவிக்கும் வகையில் வாகனங்களை நிறுத்துவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிங்கராணிகுமார், சாமிபுரம் காலனி.
சேதமடைந்த சாலை
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகராட்சி பகுதியில் உள்ள சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இந்த சாலையில் பயணிப்பதால் வாகனஓட்டிகளுக்கு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. வாகனஓட்டிகள் சேதமடைந்த சாலையில் பயணிக்க முடியாமல் மாற்று பாதையில் பல கிலோ மீட்டர் சுற்றி செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், ராஜபாளையம்.
பஸ்வசதி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
விருதுநகர் மாவட்டம் தளவாய்புரம் மிகப்பெரிய தொழில் நகரமாக வளர்ந்து வருகிறது. இந்த பகுதிக்கு செல்ல போதிய அளவு பஸ் வசதி இல்லை. எனவே இப்பகுதியில் இருந்து தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் பஸ்கள் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கார்த்தி, தளவாய்புரம்.