தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
குளம் தூர்வாரப்படுமா?
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை அடுத்த தளவாய்புரம் பகுதியில் உள்ள குளம் தூர்வாரப்படாமல் உள்ளது. மேலும் குளத்தில் கழிவுநீர் கலந்து வருகிறது. இதனால் குளம் மாசடைந்து வருகிறது. எனவே இதனை தடுத்து குளத்தை தூர்வார சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொன்ராஜ், தளவாய்புரம்.
குண்டும், குழியுமான சாலை
விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சி பகுதியில் உள்ள சில பிரதான சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இந்த சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். மேலும் அடிக்கடி சிறு, சிறு விபத்துக்களும் நடக்கிறது. எனவே சேதமடைந்த சாலைகளை சீரமைக்க அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குமார், சிவகாசி.
பொதுமக்கள் அவதி
விருதுநகர் மாவட்டம் கடம்பன்குளம் ஊராட்சிக்குட்பட்ட பசும்பொன்புரம் கிராமத்தில் 3-வது வார்டு நடுத்தெருவில் கழிவுநீர் செல்ல வாருகால் இல்லாத காரணத்தால் கழிவுநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் வாகன ஓட்டிகளும், தெருவில் நடந்து செல்பவர்களும் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் கழிவுநீர் வாருகால் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், கடம்பன்குளம்.
வாருகால் தூர்வாரப்படுமா?
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு வட்டம் கீழகோட்டையூர் திருவள்ளுவர் நகரில் உள்ள வாருகாலில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி நிற்கிறது. தேங்கிய கழிவுநீரில் இருந்து கொசுக்கள் உருவாகி டெங்கு போன்ற நோய்களும் பரவ வாய்ப்பு உள்ளது. எனவே கழிவுநீர் வாருகாலை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், வத்திராயிருப்பு.
நாய்கள் தொல்லை
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகராட்சி 9,10,11,-வது வார்டு சம்மந்தபுரம் பகுதிகளில் தெரு நாய்கள் அதிக அளவில் சுற்றி திரிகின்றன. இந்த நாய்கள் தெருவில் செல்பவர்களை துரத்தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-துவதுடன் சிலரை கடித்தும் விடுகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே இந்த நாய்களை பிடுத்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நேசன், ராஜபாளையம்.