தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

விருதுநகர்

சேதமடைந்த சாலை

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகர் பகுதியில் உள்ள சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகனஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதனால் விபத்துகளும் அடிக்கடி நடக்கிறது. எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாரிராஜ், ராஜபாளையம்.

தேங்கி கிடக்கும் குப்பை

விருதுநகர் நான்கு வழிச்சாலையில் வடமலைக்குறிச்சி கிராம விலக்கு அருகே உள்ள பாலத்தின் கீழ் பகுதியில் கோழிக்கழிவுகள், குப்பைகள் கொட்டப்படட்டு அகற்றப்படாமல் உள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகின்றது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இந்த கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரங்கநாதன், விருதுநகர்.

நாய்கள் தொல்லை

விருதுநகர் பாண்டியன் நகர் சாலை பகுதியில் அதிக அளவில் தெருநாய்கள் சுற்றிதிரிகின்றன. இந்த நாய்கள் இவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகளை துரத்துவதால் விபத்திலும் சிக்குகின்றனர். மேலும் சாலையில் செல்லும் வாகனங்களின் குறுக்கே பாய்ந்து விபத்துகளையும் ஏற்படுத்துகிறது. எனவே இப்பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜெயசந்திரன், விருதுநகர்.

பொதுமக்கள் அவதி

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பெருமாள்தேவன்பட்டியில் கால்நடை மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த நிலையில் இந்த மருத்துவமனை நுழைவுவாயில் பகுதியானது சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதனால் இந்த மருத்துவமனைக்கு வரும் மக்கள் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை கவனித்து சரிசெய்ய வேண்டும்.

அய்யம்பெருமாள், ஸ்ரீவில்லிபுத்தூர்.

குண்டும், குழியுமான சாலை

விருதுநகர் மாவட்டம் புல்லலக்கோட்டை ரோடு உழவர் சந்தை சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இந்த சாலையில் வாகனங்களை இயக்க முடியாமல் வாகனஓட்டிகள், பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதி சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜெயச்சந்திரன், புல்லலக்கோட்டை.

பயணிகள் சிரமம்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பணிமனையிலிருந்து வத்திராயிருப்பு, புதுப்பட்டி, கான்சாபுரம், கூமாப்பட்டி, மகாராஜபுரம், தம்பிபட்டி, கோட்டையூர், இலந்தைக்குளம், ஆயர்தர்மம், வத்திராயிருப்பு மற்றும் சுற்றுவட்டாரபகுதி ஊர்களுக்கு இயக்கப்படும் அரசு பஸ்களின் மேற்கூரைகள் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் இந்த வழிதடத்தில் செல்லும் பயணிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் இயங்கும் பஸ்களை முறையாக பராமரிக்க வேண்டும்.

மாதவன், ஸ்ரீவில்லிபுத்தூர்.

பழுதான அடிபம்பு

விருதுநகர் அருகே ஆமத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே வெங்கடேசபுரம் காலனியில் அடிபம்பு சேதமடைந்து செயல்படாமல் உள்ளது. இதனால் அந்த பகுதியில் மக்கள், மாணவர்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகின்றனர். எனவே பழுதடைந்த அடிபம்பை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நாதன், ஆமத்தூர்.

மழையால் சேதமான சாலை

விருதுநகர் மாவட்டம் ஆர்.ஆர்.நகர் வழியாக துலுக்கபட்டி, கோட்டூர் ஆகிய பகுதிகளுக்கு புதிதாக தார்ச்சாலையானது அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது பெய்த மழையால் இந்த சாலையானது சேதமடைந்து மழைநீர் தேங்கி காணப்படுகிறது. இதனால் இந்த சாலையில் வாகனங்களை இயக்க முடியாமல் வாகனஓட்டிகள், பொதுமக்கள் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுந்தரமூர்த்தி, ஆர்.ஆர்.நகர்.

தேங்கி நிற்கும் மழைநீர்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்த மங்கபுரம் அருகே ராஜா நகரில் சாலை வசதி கிடையாது. இதனால் மழை பெய்தால் சாலையில் நீரானது தேங்கி அப்பகுதியின் சுகாதாரத்தை கெடுக்கிறது. மேலும் தேங்கிய கழிவுநீரில் கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் அபாயம் நிலவுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் முறையான சாலைவசதி ஏற்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், மங்கபுரம்.

பஸ்வசதி

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் இருந்து மதுரைக்கு மதிய நேரத்தில் ேபாதுமான பஸ்வசதி இல்லை. இதனால் இப்பகுதியில் உள்ள மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் என அனைவரும் குறிப்பிட்ட நேரத்திற்குள் செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்ைக எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், காரியாபட்டி.


Next Story