தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
விபத்தை ஏற்படுத்தும் மின்கம்பம்
விருதுநகர் மாவட்டம் அச்சம்தவிர்த்தான் அக்ரகாரம் தெருவில் புதிய சாலை போடப்பட்டது. சாலையின் நடுவே உள்ள மின்கம்பத்தை அகற்றாமல் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் வாகனஓட்டிகள், நடைபாதையினர் சாலையில் பயணிக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். மேலும் வாகனஓட்டிகள் கவனக்குறைவினால் மின்கம்பத்தில் மோதி விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே மின்கம்பத்தை மாற்று இடத்தில் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முருகன், அச்சம்தவிர்த்தான்.
கொசுக்கள் தொல்லை
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கொசுக்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் இந்த பகுதியில் உள்ள மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. இதை தவிர்க்க இந்த பகுதிகளில் கொசுமருந்து அடிக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், ராஜபாளையம்.
கூடுதல் பஸ் இயக்கப்படுமா?
விருதுநகர் மாவட்டம் ஆலங்குளத்திற்கு இயக்கப்படும் பஸ்கள் போதுமானதாக இல்லை. இதனால் இப்பகுதியில் உள்ள மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகின்றனர். அதிலும் குறிப்பாக மாணவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே இந்த பகுதியில் கூடுதல் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், ஆலங்குளம்.
நாய்கள் தொல்லை
விருதுநகர் அல்லம்பட்டி பகுதியில் தெருநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நாய்கள் சாலையில் செல்பவர்களை துரத்துவதால் பெண்கள், குழந்தைகள் பகல் மற்றும் இரவு நேரங்களில் சாலையில் செல்ல மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே தொல்லை தரும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சந்தோஷ், அல்லம்பட்டி.
சேதமடைந்த சாலை
விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சாலைகள் ஆங்காங்கே சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இந்த சாலைகளில் வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், சிவகாசி.
பொதுமக்களுக்கு இடையூறு
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி பகுதியில் தெருநாய்கள் சாலையில் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன. நாய்கள் துரத்துவதால் சிறுவர்கள் வீதிகளில் விளையாட அச்சப்படுகின்றனர். மேலும் சாலையில் செல்லும் வாகனங்கள் மீது நாய்கள் மோதுவதால் விபத்து ஏற்படும் சூழல் உள்ளது. எனவே பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வெங்கட், திருச்சுழி.
தடுப்புச்சுவர் வேண்டும்
விருதுநகர் மாவட்டம் பிளவக்கல் அணைக்கு போகும் வழியில் வராகசமுத்திரம் மற்றும் பெரியகுளம் என 2 கண்மாய்கள் உள்ளன. இந்த கண்மாய்களின் நடுவில் கரைமேல் சாலை அமைக்கப்பட்டு நீண்ட காலங்களாக போக்குவரத்து நடந்து வருகிறது. தற்போது வாகனங்களின் போக்குவரத்து அதிகமாக நடந்து வருகிறது. ஆனால் இந்த சாலையின் ஓரத்தில் தடுப்புச்சுவர் இல்லாததால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே விபத்து ஏதும் ஏற்படும் முன்னர் சாலையின் ஓரத்தில் தடுப்புச்சுவர் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பிரணவம், வராகசமுத்திரம்.
தேங்கிநிற்கும் மழைநீர்
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு தாலுகா தம்பிபட்டி தெற்கு தெரு 4-வது வார்டில் உள்ள சாலை சேதமடைந்து இருப்பதால் மழைக்காலத்தில் சாலையில் மழைநீர் குளம் போல் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. சாலையில் உள்ள பள்ளங்கள் தெரியாமல் தவறி விழுந்து ஒரு சிலர் காயம் அடைகின்றனர். எனவே சாலையை சீரமைத்து மழைநீர் தேங்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சந்தனகுமார், வத்திராயிருப்பு.
நடவடிக்கை தேவை
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நகர் பகுதிகளில் ஆங்காங்ேக குப்பைகள் தேங்கி கிடக்கின்றன. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் கொசுக்களின் தொல்லையும் அதிகமாக உள்ளது. இதுகுறித்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், சாத்தூர்.
ஆபத்தான மின்கம்பம்
விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மின்கம்பம் சேதமடைந்து காணப்படுகிறது. தற்போது மழைக்காலம் என்பதால் இந்த மின்கம்பம் சாய்ந்து விழுந்து விடுமோ என பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். எனவே மின்கம்பம் சாய்ந்து விழுந்து உயிர்பலி எதுவும் நிகழ்வதற்கு முன்னதாக அகற்றி விட்டு புதிய மின்கம்பம் அமைக்க வேண்டும்.
பொதுமக்கள், விருதுநகர்.