தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

மதுரை

புதிய சாலை வேண்டும்

மதுரை வடக்கு தொகுதி செல்லூர் குலமங்கலம் சாலையில் இருபுறமும் சாலை வசதி இல்லை. இதனால் இந்த பகுதியில் உள்ள மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே இங்கு சாலை அமைத்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சந்தனகுமார், மதுரை

பொதுமக்கள் அவதி

மதுரை மாநகர் சுண்ணாம்புகார தெரு பகுதியில் சாலையில் கழிவுநீர் செல்கிறது. மேலும் ஆங்காங்கே குப்பைகளும் தேங்கி காணப்படுகிறது. இதனால் அவ்வழியாக நடந்து செல்லும் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், மதுரை.

கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?

மதுரை மாநகர் பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து திருப்புவனம் போன்ற பகுதிகளுக்கு குறைந்த அளவிலான பஸ்களே இயக்கப்படுகின்றன. இதனால் இந்த பகுதிகளுக்கு செல்லும் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே கூடுதல் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுப்பார்களா?

அன்புமணி, மதுரை.

சுகாதார சீர்கேடு

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றியம் கொண்டயம்பட்டி முடக்கு சாலை பின்புறம் உள்ள கால்வாயில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முத்துசாமி, அலங்காநல்லூர்.

பயணிகள் நிழற்குடை தேவை

மதுரை வடக்கு தொகுதி செல்லூர் பாலம் ஸ்டேஷன் ரோடு எல்.ஐ.சி. பஸ் நிறுத்தம் அருகில் பயணிகள் நிழ்ற்குடை இல்லை. இதனால் இங்கே வரும் முதியோர் கர்ப்பிணிகள் நீண்ட நேரம் வெயிலில் நிற்க முடியாமல் தவிக்கின்றனர். எனவே இங்கே பயணிகள் நிழற்குடை கட்டி தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்

பொதுமக்கள், செல்லூர்.

வேகத்தடை வேண்டும்

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள தென்கரையில் அகலமான தார்சாலை அமைக்கப்பட்டது. புதிதாக போடப்பட்ட இந்த சாலையில் வேகத்தடைகள் இல்லாததால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றது. எனவே இந்த சாலையில் விபத்துகளை தடுக்க வேகத்தடைகள் அமைக்க வேண்டும்.

காளீஸ்வரி, கவுரிநாதன், சோழவந்தான்.

பயணிகள் அச்சம்

மதுரை மாட்டுதாவணி எம்.ஜி.ஆர். பஸ் நிலையத்தில் பயணிகளை அச்சுறுத்தும் வகையில் நாய்கள் சுற்றித்திரிகின்றன. இதனால் பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகள் மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே பயணிகளை அச்சுறுத்தும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமா?

பொதுமக்கள், மதுரை.

நடவடிக்கை தேவை

மதுரை மாநகர சாலைகளில் பொதுமக்களையும், வாகன ஓட்டிகளையும் அச்சுறுத்தும் வகையில் சிலர் அதிக ஒலி எழுப்பும் ஒலிப்பான்களை பயன்படுத்தி வருகின்றனர். இந்த சத்தத்தால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர். எனவே அதிக ஒலி எழுப்பும் ஒலிப்பான்களை பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சக்திவேல், மதுரை.

நாய்கள் தொல்லை

மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி வடக்கு ஒன்றியம் பாண்டாங்குடி கிராமத்தில் நாய்கள் அதிகமாக இருப்பதால் மக்கள் பயத்துடன் வெளியே சென்று வரும் நிலையும் உள்ளது. மேலும் சிலரை நாய்கள் கடித்தும் வருகிறது. எனவே அதிகாரிகள் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், பாண்டாங்குடி.

போக்குவரத்து நெரிசல்

மதுரை மகால் வடம் பொக்கித்தெருவில் வாகனங்கள் செல்ல இடையூறாக உள்ளன. மேலும் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. இதனால் இங்கு வரும் வெளிநாட்டினர் மற்றும் சுற்றுலா பயணிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே போக்குவரத்து நெரிசலை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மதனா, மதுரை.


Next Story