தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
கொசுக்கள் தொல்லை
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கொசுக்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் பொதுமக்கள் இரவு நேரங்களில் மிகவும் அவதிப்படுகின்றனர். மேலும் கொசுக்களின் மூலம் நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே கொசுக்களை ஒழிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முத்து கணேஷ், ஸ்ரீவில்லிபுத்தூர்.
பொதுமக்கள் அவதி
விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் தாலுகா அலுவலகம், போலீஸ்நிலையம், பத்திரப்பதிவு, மின்வாரியம், வங்கிகள் உள்பட அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. தற்போது பெரும்பாலான அரசு அலுவலகங்களில் இருக்கை வசதி, குடிநீர் வசதி, சுகாதார வளாகம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. இதனால் இங்கு வரும் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குமரன், திருச்சுழி.
ேசதமடைந்த சாலை
விருதுநகர் மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள லட்சுமிபுரம்- கீழாண்மறைநாடு செல்லும் சாலை சேதமடைந்து காணப்படுகிறது. போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலை சேதமடைந்து இருப்பதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். ஆதலால் இந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வெற்றி, ஆலங்குளம்.
விவசாயிகள் அவதி
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு மற்றும் அதனை சுற்றி உள்ள கிராம மக்கள் ஏராளமானோர் விவசாயம் செய்து வருகின்றனர். இவர்களின் விவசாய நிலத்திற்குள் காட்டுப்பன்றிகள், யானை போன்ற விலங்குகள் நுழைந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இதனால் விவசாயிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பழனிசாமி, வத்திராயிருப்பு.
மாடுகள் தொல்லை
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் தென்காசி சாலை, மதுரை சாலை, முடங்கியாறு சாலை, ரெயில்வே பீடர் சாலை, டி.பி. மில்ஸ் சாலை, சத்திரப்பட்டி சாலை உள்ளிட்ட நகரின் முக்கிய சாலைகளில் மாடுகள் சுற்றி திரிகின்றன. இதனால் இந்த வழியாக செல்லும் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். மேலும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயமும் உள்ளது. எனவே இதுகுறித்து அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மணிகண்டன், ராஜபாளையம்.