தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
தொற்றுநோய் பரவும் அபாயம்
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது. கொசுக்களால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கொசு தொல்லையை கட்டுப்படுத்த கொசு மருந்து அடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சந்தோஷ், தேவகோட்டை, சிவகங்கை.
பஸ் வசதி தேவை
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் இருந்து காளையார்கோவிலுக்கு குறிப்பிட்ட அளவே பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த வழியாக பயணிக்கும் பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்து பயணிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் பயணிகளின் அன்றாட வேலைகள் பாதிக்கப்படுகின்றது. எனவே இந்த வழித்தடத்தில் கூடுதல் பஸ் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், திருப்பத்தூர், சிவகங்கை.
சேதமடைந்த சாலை
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி தாலுகா விரையாதகண்டன்-சின்னதுகவூர் சாலையில் கிராவல், ஜல்லி கற்கள் போடப்பட்டது. ஆனால் தார் ஊற்றவில்லை. இதனால் இந்த சாலையில் பயணிப்பவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், விரையாதகண்டன், சிவகங்கை.
தெருநாய்கள் தொல்லை
சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் ஒன்றியத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் தெரு நாய்கள் கூட்டம், கூட்டமாக தோலில் ஒரு வித நோயுடன் சாலையில் வலம் வருகின்றது. இந்த நாய்களால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இந்த பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், எஸ்.புதூர், சிவகங்கை.
தினத்தந்தி செய்தி எதிரொலி
தினத்தந்தி புகார் பெட்டி செய்தி எதிரொலி காரணமாக காரைக்குடி புதிய பஸ் நிலையம் எதிரே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்களை போலீசார் அப்புறப்படுத்தி அந்த பகுதியில் நோ பார்க்கிங் தகவல் பலகை வைத்தனர்.
ஆர்த்தி, காரைக்குடி.