தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

விருதுநகர்

கூடுதல் பஸ் இயக்கப்படுமா?

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சி தொழில்நகரமாகவும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் வணிக நோக்கில் வந்து செல்லும் முக்கிய நகராகவும் திகழ்கிறது. இங்கிருந்து சென்னை உள்ளிட்ட முக்கிய மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பஸ்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. இதனால் பொதுமக்கள் மாவட்ட தலைநகருக்கு சென்றே பயணிக்கும் நிலை ஏற்படுகிறது. எனவே இப்பகுதியில் போக்குவரத்து சேவைகளை அதிகரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராஜேஸ், சிவகாசி.

விபத்தை ஏற்படுத்தும் சாலை

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்திற்குட்பட்ட கிராமப்புற பகுதிகளில் சில இடங்களில் உள்ள சாலைகள் சேதமடைந்து காணப்படுகிறது. சாலையில் பயணிக்க முடியாமல் வாகனஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடையும் சூழல் நிலவுகிறது. எனவே இந்த சாலைகளை சீரமைத்திட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிவக்குமார், ராஜபாளையம்.

வாகன ஓட்டிகளுக்கு இடையூறு

விருதுநகர் மாவட்டம் சிவகாசி பஸ் நிலையம் பகுதியில் சிலர் தங்களது இருசக்கர வாகனங்களை சாலையில் ஆங்காங்கே நிறுத்தி செல்கின்றனர். இதனால் சாலையில் பயணிக்கும் வாகனஓட்டிகளுக்கு இடையூறுகள் ஏற்படுகிறது. எனவே வாகனங்களை சாலையில் நிறுத்துவதை தடுக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

துரைமுருகன், சிவகாசி.

விபத்து அபாயம்

விருதுநகர் அரசு ஆஸ்பத்திரி அருகில் செல்லும் மேம்பாலத்தில் ஒளிரும் விளக்குகள் இல்லை. இதனால் இரவு நேரத்தில் சாலையில் வரும் வாகனங்கள் தெரியாமல் விபத்துகள் நேரிட வாய்ப்பு உள்ளது. மேலும் பாலத்தின் இரண்டு முனைகளிலும் வேகத்தடைகளை உயர்த்தி அமைத்து விபத்துகள் நடப்பதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராஜபாண்டியன், விருதுநகர்.

நாய்கள் தொல்லை

விருதுநகர் மாவட்டம் ஆலங்குளம் பகுதியில் ஏராளமான நாய்கள் சாலையில் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இந்த நாய்கள் சாலையில் செல்பவர்களை துரத்துவதால் பொதுமக்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகின்றனர். மேலும் நாய்களால் வாகனஓட்டிகள் சாலையில் பயணிக்க முடியாத சூழல் நிலவுகிறது. எனவே தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாணிக்கம், ஆலங்குளம்.


Next Story