தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
பொதுமக்கள் சிரமம்
மதுரை பழைய மகாளிபட்டி ரோடு பகுதியில் டிரான்ஸ்பார்மர் உள்ளது. இப்பகுதியில் அதிக அளவில் கற்களை குவித்து வைத்துள்ளனர். ேமலும் சாலைகளில் ஆங்காங்கே கற்கள் கிடப்பதால் பொதுமக்கள் நடந்து செல்ல சிரமமாக உள்ளது. எனவே, அப்பகுதியில் குவிந்து கிடக்கும் கற்களை அகற்றிட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், மதுரை.
கால்நடைகள் தொல்லை
மதுரை மாநகராட்சி தீர்த்தக்காடு வண்டியூர் 38-வது வார்டு பகுதியில் கால்நடைகள் அதிக அளவில் சாலையில் சுற்றித்திரிகின்றன. இதனால் வாகனஓட்டிகள் சாலையில் செல்லவே அச்சப்படுகின்றனர். மேலும் இவ்வாறு சுற்றித்திரியும் கால்நடைகளால் விபத்து அபாயம் உள்ளது. வாகன ஓட்டிகளின் நலன்கருதி சாலையில் சுற்றி திரியும் மாடுகளை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமா?
தங்கப்பாண்டியன், மதுரை.
மாணவர்கள் அவதி
மதுரை மாவட்டம் திருநகர் 3-வது நிறுத்தத்தில் இருந்து அண்ணா பார்க்கிற்கு இடையிலுள்ள பல தெருக்களில் குழாய் பதிப்பதற்காக குழிகள் தோண்டப்பட்டது. தற்போது இந்த குழிகள் சரிவரமூடாமல் இருக்கிறது. இதனால் மாணவர்களும், பொதுமக்களும் அவதியடைந்து வருகின்றனர். மேலும் விபத்து அபாயம் உள்ளதால் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுந்தரம், திருநகர்.
நடவடிக்கை தேவை
மதுரை அனுப்பானடி மற்றும் கூடல்புதூர் இடையே பெரியார் நிலையம் வழியாக தினமும் பஸ்கள் இயக்கப்படுகிறது. தற்போது மதுரை ரெயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் சென்னை விரைவு ரெயில்கள் கூடல்நகரோடு நிறுத்தப்படுகிறது. எனவே ரெயில் பயணிகளின் நலன்கருதி பஸ் இயக்கத்தை கூடல்நகர் ரெயில் நிலையம் வரை நீட்டிக்க வேண்டும். மேலும் மின்விளக்கு வசதி ஏற்படுத்திதர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஹரிவிக்னேஷ், அனுப்பானடி.
சாலை சீரமைக்கப்படுமா?
மதுரை வில்லாபுரம் மீனாட்சிநகர் புதிய கீரைதுரை போலீஸ் நிலையம் அருகில் உள்ள சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. சாலையில் பயணிப்பதால் வாகனஓட்டிகள் சிறு, சிறு விபத்துகளில் சிக்கும் அபாயம் நிலவுகிறது. எனவே சாலைய சீரமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
ராஜேஷ், மதுரை.