தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
குப்பை தொட்டி வைப்பார்களா?
மதுரை ரேஸ்கோர்ஸ் காலனியில் உள்ள குப்பை தொட்டி அகற்றப்பட்டுள்ளது. இதனால் குப்பைகளை அனைவரும் கீழே கொட்டுகின்றனர். இதன் காரணமாக இந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழ்நிலை உள்ளது. எனவே இந்த பகுதியில் மீண்டும் குப்பை தொட்டி வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்கள், மதுரை.
பொதுமக்கள் அச்சம்
மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியில் தெரு நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றி வருகின்றன. இதனால் இப்பகுதி மக்கள் இரவு நேரங்களில் வெளியே செல்ல மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் உள்ள தெரு நாய்களின் தொல்லையை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், திருமங்கலம்.
பஸ் வசதி
மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையம் மற்றும் பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து கீழடி அருங்காட்சியகம் வரை பஸ் வசதி செய்து தர வேண்டும். நேரடியாக பஸ் வசதி ஏற்படுத்தி தந்தால் அருங்காட்சியகத்தை பார்வையிட எளிதாக இருக்கும்.. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
அன்புமணி, மதுரை.
சாலையில் செல்லும் கழிவுநீர்
மதுரை காமராஜபுரம் பகுதி 45-வது வார்டு பழைய கீழமதுரை ஸ்டேஷன் ரோட்டில் சாலை பராமரிப்பிற்கு தோண்டப்பட்டு பல மாதங்களாக சீரமைக்கப்படவில்லை. இதனால் கழிவுநீர் தெருவெங்கும் ஓடுகிறது. இதனால் தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். செல்வா, காமராஜபுரம்.
கொசுத்தொல்லை
மதுரை அரசு ராஜாஜி ஆஸ்பத்திரியில் மாலை 6 மணிக்கு மேல் கொசுத்தொல்லை அதிக அளவில் உள்ளது. இதனால் ஆஸ்பத்திரியில் உள்ள நோயாளிகள் இரவு நேரங்களில் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இங்கு கொசு மருந்து அடித்து கொசுத்தொல்லையை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கருப்பையா, மதுரை.