தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

மதுரை

டாஸ்மாக் கடை மாற்றப்படுமா?

மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா கொட்டாம்பட்டி வடக்கு ஒன்றியம் பாண்டாங்குடி பகுதியில் 2 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இதன் அருகில் கோவில், அரசு அலுவலகங்கள் இருப்பதால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. எனவே டாஸ்மாக் கடைகளை வேறு இடத்திற்கு மாற்றியமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், பாண்டாங்குடி.

நடவடிக்கை தேவை

மதுரை மாநகராட்சி 30-வது வார்டு வள்ளலார் தெருவில் அடிக்கடி குடிநீர் குழாய் உடைவதால் தெரு முழுவதும் அவ்வப்போது சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.

ராதாகிருஷ்ணன், மதுரை.

சாலை அமைக்கப்படுமா?

மதுரை பெத்தானியாபுரத்தில் உள்ள தெரு பகுதி சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இப்பகுதியில் புதிய தார்சாலை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

கருப்பையா, பெத்தானியாபுரம்.

போக்குவரத்து இடையூறு

மதுரை மாநகரில் பல்வேறு சாலைகளின் குறுக்கே கால்நடைகள் அதிகம் சுற்றித்திரிகின்றன. இதனால் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுவதுடன் அவ்வப்போது விபத்துக்களும் நடக்கிறது. எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும்.

குமரன், மதுரை.

பயணிகள் நிழற்குடை வேண்டும்

மதுரை மாநகர் அரசு ஆஸ்பத்திரி அருகே ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்ட சாலையில் பயணிகள் நிழற்குடை இல்லாத காரணத்தால் பொதுமக்கள் வெயிலில் சாலையோரம் நிற்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

கண்ணன், மதுரை.


Next Story