தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
நடவடிக்கை தேவை
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டுள்ளதால் பொதுமக்கள் நடந்து செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் அரசு மேல்நிலைப்பள்ளி முன்புறம் சாலையை ஆக்கிரமித்து கடைகள் உள்ளதால் பள்ளி மாணவர்கள் அவதிப்படும் நிலை உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உதயசூரியன், காரியாபட்டி.
போக்குவரத்திற்கு இடையூறு
விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சி பகுதியில் போக்குவரத்திற்கு இடையூறாக சிலர் வாகனங்களை நிறுத்தி செல்கின்றனர். இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்படுவதுடன் விபத்துகளும் அடிக்கடி நடக்கிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராம்குமார், சிவகாசி.
குண்டும், குழியுமான சாலை
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் பாளையம்பட்டியில் இருந்து கோபாலபுரம் செல்லும் கரிசல்குளம் கண்மாய் சாலை மிகவும் சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இப்பகுதி வழியே செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முத்து செல்வம், பாளையம்பட்டி.
சேதமடைந்த கட்டிடம்
விருதுநகர் அருகே பாலவனத்தம் பகுதியில் உள்ள கிளை நூலக கட்டிடம் மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே விபரீதம் எதுவும் நிகழ்வதற்குள் சேதமடைந்த கட்டிடத்தை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மோகன், பாலவனத்தம்.
வாருகால் அமைக்கப்படுமா?
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு தாலுகா எஸ். ராமச்சந்திரபுரத்தில் கலைமகள் தெற்கு, மேற்கு தெருக்களில் வாருகால் வசதி இல்லை. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையில் தேங்கி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துவதுடன், தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இப்பகுதியில் வாருகால் அமைத்து தர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
பொதுமக்கள், எஸ். ராமச்சந்திரபுரம்.