தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
நடவடிக்கை தேவை
மதுரை இன்மையில் நன்மை தருவார் கோவிலுக்கு செல்லும் தெருக்களில் ஆங்காங்கே சாலையோரத்தில் குப்பைகளும், சாக்கடை கழிவுகளும் தேங்கி நிற்கின்றன. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடாகவும் உள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? பொதுமக்கள், மதுரை.
ரவுண்டானா அமைக்க வேண்டும்
மதுரையில் புதிதாக திறக்கப்பட்ட ஆழ்வார்புரம்- ஓபுளா படித்துறை மேம்பாலத்தில் வாகனங்கள் சீறிப் பாய்ந்து வருகின்றன. இதனால் விபத்து ஏற்படும் நிலை உள்ளது. எனவே பாலத்தின் இருபுறமும் வைகை வடகரை மற்றும் வைகை தென்கரையில் ரவுண்டானா அமைத்து வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அன்புமணி, மதுரை.
விபத்து அபாயம்
மதுரை புறவழிச்சாலையில் இருந்து மாடக்குளம் திரும்பும் இடத்தில் உள்ள மின் கம்பம் சாயும் நிலையில் உள்ளது. எனவே விபத்துகள் எதுவும் நிகழ்வதற்குள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மோகன், மதுரை.
நாய்கள் தொல்லை
மதுரை மாவட்டம் சின்ன வாகைக்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாய்களின் தொல்லை அதிகமாக உள்ளது. மேலும் இந்த நாய்கள் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை துரத்துவதால் அவ்வப்போது விபத்துக்களும் நடக்கிறது. எனவே பொதுமக்களின் நலன் கருதி நாய்களின் தொல்லையை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், சின்னவாகைக்குளம்.
தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
மதுரை மாநகரில் போக்குவரத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்த சாலைகளில் கால்நடைகள் சுற்றித்திரிகின்றன. இதனால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுவதுடன் அவ்வப்போது விபத்துக்களும் நடக்கிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? மனோகரன், மதுரை.